சீன ஆய்வகத்தில் இருந்து தப்பிய வயாகரா செலுத்தப்பட்ட கொசுக்கள்.. தவறாக வைரலான நையாண்டி செய்தி !

பரவிய செய்தி

 

 

விளக்கம்

கோவிட்-19 தொற்றின் தொடக்கமாக கூறப்படும் சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகம் ஒன்றில் இருந்து வயாகரா செலுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் தப்பித்துள்ளதாக கட்டுரை ஒன்றின் இணைப்புடன் ஓர் தகவல் ட்விட்டர் உள்ளிட்டவையில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement

Archive link 

வுஹான் ஆய்வகத்தில் இருந்து வயாகரா செலுத்தப்பட்ட கொசுக்கள் தப்பித்ததாக worldnewsdailyreport எனும் இணையதளத்தின் செய்தி இணைப்பும் இணைத்தே பகிரப்பட்டு வருகிறது. அந்த இணைப்பில் சென்று பார்க்கையில், தப்பித்த கொசுக்கள் குறித்து மருத்துவர் வென்சி யிங் யின் ஜிங் பேசியதாகவும், பாதிக்கப்பட்டவர் என வயதானவரின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.

Advertisement

ஆனால், அந்த இணையதளத்தின் ” மறுப்பு பிரிவில் “, ” இந்த இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் கற்பனையான நையாண்டிகள் ” எனக் குறிப்பிட்டு உள்ளனர். இதையறியாமல் பலரும் உண்மை என நினைத்தும், கிண்டலாகவும் இந்த செய்தி இணைப்பை உலக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் வயதானவர், ஜப்பானிய தொழிலதிபரான யுகிஷி ஷுகன்ஜி. இவர் 2003-ம் ஆண்டு தன்னுடைய 114 வயதில் காலமானார். அவர் உயிரிழந்த போது, உலகிலேயே அதிக வயதுடைய நபராக இருந்தார்.

மேலும் படிக்க : 62 ஆண்டுகள் காது கேளாதவராக நடித்த கணவனின் கதை | உண்மை என்ன ?

நையாண்டிப் பதிவுகள் மற்றும் செய்திகள் உண்மை என நினைத்து பகிரப்படுவது ஒன்றும் முதல்முறையல்ல. இதற்கு முன்பாக கூட, worldnewsdailyreport வெளியிட்ட நையாண்டி செய்தி ஒன்று உலகம் முழுவதும் பரவி உண்மை என நினைத்து பகிர்ந்து இருக்கிறார்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button