Articles

வெற்றி பெற்ற 539 எம்பிக்களில் 43% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்-ஆய்வுத் தகவல்

2019-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், வெற்றிப் பெற்ற 539 எம்பிக்களில் 43 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.

Advertisement

National Election Watch மற்றும் Association for Democratic Reforms (ADR) ஆகிய அமைப்புகள் வெளியிட்ட ஆய்வுத் தகவலில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற 539 வேட்பாளர்கள் அளித்த பிரமாணப் பத்திரத்தில் அளித்த தகவல்களின் படி 233 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என தெரிவித்து உள்ளனர்.

2019 தேர்தலில் வெற்றி பெற்ற குற்றப்பின்னணி கொண்ட எம்பிக்களை கட்சி அடிப்படையில் பார்க்கும் பொழுது, காங்கிரஸில் 29 பேர்(57%), பிஜேபி 116 பேர் (39%), ஜனதா தளம்(யூ) 13 பேர் (81%),திமுக 10 பேர் (43%), திரிணாமுல் காங்கிரஸில் 9 பேர் (41%) அளவிற்கு எம்பிக்களை கொண்டுள்ளனர்.

மேலும், பிஜேபியில் 87 எம்பிக்கள்(29%), காங்கிரஸில் 19 பேர் (37%), திமுகவில் 6 பேர் (26%) , திரிணாமுல் காங்கிரஸ் 4 பேர் (18%), ஜனதா தளம்(யூ) 8 பேர் (50%) மீது தீவிர குற்றப்பின்னணி வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.

வெற்றி பெற எம்பிக்களில் 11 பேர் மீது (indian penal code section-302) கொலை குற்ற வழக்குகளும், 30 பேர் மீது கொலை முயற்சி (IPC Section-307) வழக்குகளும் உள்ளன. 19 எம்பிக்களின் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளன. 6 பேர் மீது கடத்தல் வழக்கும், 3 பேர் மீது பாலியல் வன்புணர்வு வழக்குகளும் உள்ளன.

இதற்கு முன்பாக 2014 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற 542 எம்பிக்களில் 183 (34%) பேர் மீது குற்றப்பின்னணி இருந்துள்ளன. அதற்கு முந்தைய 2009 தேர்தலில் வெற்றிப் பெற்ற 543 எம்பிக்களில் 162 (30%) பேர் தங்களின் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

கடந்த தேர்தல்களை விட தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2009-ஐ ஒப்பிடும் பொழுது குற்ற வழக்கு கொண்ட எம்பிக்களின் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரித்து உள்ளது. 542 எம்பிக்களில் மூன்று பேர் குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெளிவாக கிடைக்கவில்லை.

Proof :

Nearly 50 per cent MPs in new Lok Sabha have criminal records

Association of democratic reforms 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Back to top button