This article is from Mar 13, 2021

தண்ணீர் குடிக்க கோவிலுக்குள் வந்த முஸ்லீம் சிறுவனை அடித்தவர் கைது !

தண்ணீர் குடிப்பதற்காக இந்து கோவிலுக்குள்(மந்திர்) சென்ற சிறுவனை ஒருவர் தாக்கி எடுக்கப்பட்ட 24 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

Facebook link | Archive link 

வீடியோவில் ஒருவர் உன் பெயர், தந்தை பெயர் என்ன எனக் கேட்டதற்கு தன் பெயர் ஆசிப் என்றும், தந்தை பெயர் ஹபீப் என்றும் சிறுவன் கூறுகிறான். கோவிக்குள் என்ன செய்கிறாய் எனக் கேட்டதற்கு  தண்ணீர் குடிக்க வந்தாக பதில் கூறும் போதே சிறுவனை தாக்குகிறார் எனும் நிலைத்தகவல் உடன் பகிரப்பட்டு வருகிறது.

பிபிசியின் முன்னாள் எடிட்டரும், ஜனதாகாரிப்போர்ட்டர் உடைய நிறுவனருமான ரிபாத் ஜவைத் என்பவர் சிறுவன் தாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து, கோவிலில் தண்ணீர் குடித்தது தவறா, காஸியாபாத் போலீஸ் அந்த நபரை கைது செய்ய வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

Archive link 

இதற்கு பதில் அளித்த காஸியாபாத் போலீஸ், வீடியோ தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், சிறுவனை அடித்தவரை கைது செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறுவனை அடித்து வீடியோ எடுத்தவர்கள் பீகாரைச் சேர்ந்த ஷீரங்கி நந்தன் யாதவ் மற்றும் அவரின் மகன் அஸ்வனி குமார் யாதவ் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக காவல் துறை தெரிவித்து உள்ளது. கோவிலுக்குள் வந்த சிறுவனை தாக்கிய வீடியோ இந்திய அளவில் பகிரப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader