சீட்டு விளையாடி 100 அபராதம் கட்டிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ?

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அளிக்கப்பட்ட வேட்புமனு உடன் கூடிய பிரமாண பத்திரத்தில் வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்குகள் மற்றும் சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்களை அளிப்பது வழக்கம்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தன்னுடைய பிரமாண பத்திரத்தில், பொது இடத்தில் சீட்டு விளையாடியதற்காக அபராதம் செலுத்தியதை வழக்கு குறித்த தகவலில் குறிப்பிட்டு இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கி.பாண்டி. அவர் மார்ச் 15-ம் தேதி அளித்த பிரமாண பத்திரத்தில், ” 2012-ம் ஆண்டில் பொது இடத்தில் சீட்டு விளையாடியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 2012 ஜூன் 4-ம் தேதி சாத்தூர் நீதிமன்றத்தில் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தையும் செலுத்தி இருக்கிறார் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் குற்றப் பின்னணி இல்லாதவர்கள் என தேர்தல் ஆணையம் கூறியதா ?
இதற்கு முன்பாக, நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் மீது எந்தவொரு குற்ற பின்னணியும் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்ததாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே ஓர் வதந்தி பரப்பப்பட்டது.
மேலும் படிக்க : மனுவில் குறிப்பிட்ட ரூ.1000 சீமானின் ஆண்டு வருமானமா, வருமான வரியா ?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனுவில் ஆண்டு வருமானம் 1000 ரூபாய் எனக் குறிப்பிட்டது சர்ச்சையாகியது. அது வருமான வரி செலுத்திய தொகை என ஆதரவாளர்களால் மறுக்கப்பட்டு வந்தது.
பின்னர், சீமான் மீண்டும் திருத்தப்பட்ட வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால், ஆண்டு வருமானம் 1000 ரூபாய் எனக் குறிப்பிட்ட மார்ச் 15-ம் தேதி வேட்புமனுவே ஏற்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Links :