நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையில் தவறான படம் இணைப்பு!

2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய தருணத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், குரங்கிணி தீ விபத்தில் என குறிப்பிட்டு எரிந்த முயல் ஒன்றின் புகைப்படம் இடம்பெற்று இருக்கும். அது தவறான படங்கள் என சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இதே படம் இதற்கு முன்பு தமிழக தீ விபத்தில் இறந்த உயிரினங்கள் என தவறாக பரவிய படங்களுடன் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக கட்டுரை ஒன்றை Youturn வெளியிட்டு இருந்தோம்.
முயல் மற்றும் மற்ற உயிரினங்கள் காட்டு தீயில் எரிந்த சம்பவம் எங்கே நிகழ்ந்தது என்பதை கீழே உள்ள லிங்கில் சென்று விரிவாக படிக்கவும்.
படிக்க : தமிழகக் காட்டில் தீ வைத்ததில் இறந்த உயிரினங்களா ?
படத்தின் உண்மைத்தன்மை அறியாமல் குரங்கிணி தீ விபத்தில் இறந்த உயிரினங்கள் என தவறாக படத்தைத் தேர்தல் அறிக்கையில் நாம் தமிழர் கட்சியினர் இணைத்து உள்ளனர்.