This article is from May 24, 2019

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன ?

2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து களம் இறங்கிய கட்சிகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சி முன்பிருந்த வாக்கு சதவீதத்தை விட கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளனர் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை காண முடிந்தது.

தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 20 ஆண்கள், 20 பெண்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டன. மே 23-ம் தேதி வெளியான தேர்தல் முடிவில் நாம் தமிழர் கட்சி எந்தெந்த தொகுதியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது, அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள், வாக்கு சதவீதம் ஆகியவற்றை காண்போம்.

1. காஞ்சிபுரம் (62,771)
2. கன்னியாகுமரி (17,069)
3. கரூர் (38,543)
4. கிருஷ்ணகிரி (28,000)
5. நாமக்கல் (38,531)
6. பெரம்பலூர் (53,545)

நாம் தமிழர் கட்சி 6 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கட்சி அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 84,979 வாக்குகளையும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 17,069 வாக்குகளையும் பெற்றுள்ளார். 14 தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கினை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 37 தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 16,45,185. நாம் தமிழர் கட்சி 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றது அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 3.79 % ஆகும்.

மேலும் படிக்க : தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாம் இடம் யாருக்கு ?

இது தமிழக தொகுதிகளின் நிலவரமாகும். புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட ஷர்மிளா பேகம் 22,857 (2.89%) வாக்குகளை பெற்று உள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது.

(நன்றி : இளையதலைமுறை)

Proof :

Election Commission official  

Please complete the required fields.




Back to top button
loader