நார்த்தாமலையில் பிரச்சனை செய்தது இவர்கள் தான்!

நார்த்தாமலை கிராமத்தில் இருந்த மலையின் சுனை நீரில் இருந்து 148 ஆண்டுகளுக்கு பிறகு “ யாதும் ஊரே யாவரும் கேளீர் ” அமைப்பினரின் முயற்சியால் மீட்கப்பட்ட சிவ லிங்கத்தின் பூஜை விவகாரத்தில் அர்ச்சகர்கள் இருவர் பிரச்சனை செய்த முழு நிகழ்வையும் கட்டுரை வடிவில் முன்பு வெளியிட்டு இருந்தோம்.
உண்மை நிகழ்வை சிலர் ஏற்க மறுத்து அதற்கு எதிரான கருத்துகளை முன் வைத்தனர். மேலும், பிரச்சனை செய்தவர்களுக்கு பூணூல் இல்லை எனவும், அவர்களின் புகைப்படங்களை கேட்டும் பதிவும், குறுஞ்செய்தியும் நமக்கு அதிகம் வந்தது.
நடந்த நிகழ்வை அறியாதவர்கள் இதற்கு முன் வெளியிட்ட கட்டுரையைப் படிக்கவும் : சுத்தம் செய்யலாம், சாமியை தொடாதே !
சின்னத்தம்பி :
சின்னத்தம்பி என்பவர் தான் நார்த்தாமலை கோவிலில் பூசாரியாக இருப்பதாகவும், அவரே அங்கு பூஜைகள் செய்வதாவும், பூணூல் இல்லை அர்ச்சகர் இல்லை என பதிவிடுகின்றனர்.
முதலில் சின்னத்தம்பி யார் எனத் தெரிந்து கொள்ளுங்கள். இளைஞர்கள் அமைப்பினர் முதலில் பணியில் ஈடுப்பட்ட சித்தன்னவாசல் மலைப்பகுதியில் உள்ள கோவிலின் பூசாரி ஆவார். அங்கு இருக்கும் கோவிலுக்கு காவலராகவும், பூஜை பணிகளையும் பூசாரி போன்று செய்து வருகிறார்.
நார்த்தாமலை சிவ லிங்கத்தைப் பற்றி இளைஞர் குழுவிற்கு சொன்னதும் இவரே. இவரை தொடர்புப்படுத்தி கூறுவது தவறான தகவல்.
அர்ச்சகர்கள் புகைப்படங்கள் :
நார்த்தாமலை கோவிலில் பிரச்சனை செய்தது ராஜா மற்றும் ஆனந்த் என்ற இவ்விரு அர்ச்சகர்களே. ஆதாரத்திற்காக அவர்களின் புகைப்படங்களை கொடுத்து உள்ளோம்.
மீட்கும் பணியில் ஈடுபட்டு பூஜைகள் செய்த அமைப்பினரிடம் கோபமாக பேசியதும், அமைப்பினர் லிங்கத்திற்கு பூமாலை அணிவித்து செய்து வைத்த அலங்காரத்தை அகற்றி வீசியவர்கள் இவ்விருவருமே. லிங்கத்தின் அருகே “ தயவு செய்து உள்ளே வர வேண்டாம் “ என எழுதியதும் இவர்களே.
சிலர் பொதுவாக தானே யாரும் உள்ளே வரக் கூடாது இதில் ஏன் ? சாதியை நுழைக்கிறீர்கள் என வினவுகின்றனர். முதலில் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், 4-5 நாட்கள் கடுமையான பணிகளில் ஈடுபட்டு சிவ லிங்கத்தை மீட்டவர்களுக்கே இருவரும் தகுந்த மரியாதை அளிக்கவில்லை. யாரும் உள்ளே வரக் கூடாது பூஜை செய்யும் ஐயர்கள் மட்டும் நுழைய வேண்டும் என்றால் அங்கு ஜாதி பாகுபாடு இல்லை என்று உங்களால் கூற முடியுமா ?
லிங்கத்தை மீட்கும் பணியில் இருந்த அமைப்பினரோ, அதிகாரிகளோ அர்ச்சகர்கள் இருவரிடம் வாக்குவாதங்களில் ஈடுபட விரும்பில்லை. அதற்குள் என்ன நடந்தது என்று தெரியாமல் ஐயர்களுக்கு ஆதரவாக சில நபர்கள் கருத்துப் பதிவிடத் தொடங்கி விட்டனர்.
“ சிலருக்கு உண்மைகளை எப்பொழுதும் ஏற்க மனமில்லை “