Factcheck: தடுப்பூசியால் உடலில் காந்த சக்தி ஏற்படுவதாக பரவும் வதந்தி!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உடலில் காந்த சக்தி ஏற்படுகிறது என தன் “காந்த சக்தி” வெளிக்காட்டி நாசிக்கை சேர்ந்த ஒருவர் வெளியிட்ட காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு, சிலருக்கு காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மலட்டு தன்மை ஏற்படும் போன்ற உண்மைக்கு புறம்பாக தடுப்பூசிக்கு எதிரான ஏதாவது ஒரு செய்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வந்துகொண்டே இருக்கிறது.
அப்படிபட்ட ஒரு செய்தி தான் கொரோனா தடுப்பூசி குறிப்பாக கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு முறை போட்டுக்கொண்ட பிறகு உடலில் காந்த திறன் ஏற்படுகிறது என்பது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த அரவிந்த் சோனர் (71) என்பவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தன் உடலில் காந்த சக்தி ஏற்பட்டு விட்டது எனக்கூறி உடல் முழுவதும் கரண்டி , நாணயம் போன்ற உலோக பொருட்களை ஒட்ட வைத்து காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். இது வைரல் ஆகவே பிபிசி, நியூஸ் 18 மற்றும் பல மராத்தி செய்தி நிறுவனங்கள் சோனாரை பேட்டி கண்டு, அவருக்கு “காந்த மனிதன்” என புனைப்பெயரையும் கொடுக்கவே இந்த செய்தி வைரல் ஆனது.
ஆனால் இந்த செய்தி குறித்து ‘boom’ எனும் செய்தி நிறுவனம் அவரது குடும்பத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது ” தாங்கள் தடுப்பூசிகளே காரணம் என்று ஒருபோதும் கூறவில்லை எனக் கூறி, சரிபார்க்கப்படாமல் இதனை பரப்பியதற்காக அவர்கள் செய்தி நிறுவனங்களை குற்றம் சாட்டினர். “இது குறித்து அவரது மகன் ஜெயந்த் கூறுகையில் ,” வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட ஒரு செய்தியை பரிசோதனை செய்து பார்த்தோம். என் அம்மாவிற்கு ஒட்டவில்லை ஆனால் உலோகங்கள் (stainless steel) எனது தந்தையின் உடலில் ஒட்டிக்கொண்டன. இது குறித்து நாங்கள் விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்களிடம் விசாரித்தோம் அவர்கள் தடுப்பூசியால் தான் இப்படி ஆகிறது எனும் கூற்றை மறுத்தனர்.” எனக் கூறியுள்ளார்.
COVID-19 தடுப்பூசியால் ஒருவருக்கு காந்த சக்தி உண்டாகுமா?
நாசிக் மாநகராட்சியின் மருத்துவ அதிகாரி டாக்டர் பாபுசாஹேப் நாகர்கோஜே கூறியதாவது , ” இதுவரை எங்கள் மாவட்டத்தில் 4 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி உள்ளனர். யாரும் இது போன்ற ஒரு புகார்கள் வந்தது இல்லை. இந்த ‘காந்த திறன்’ தடுப்பூசியுடன் தொடர்புடையது அல்ல. இதனை ஆராய்ச்சி செய்வதற்கு குழு ஒன்றை அனுப்பி உள்ளோம்.”
“COVID-19 தடுப்பூசியால் ஒருவருக்கு காந்த சக்தி உண்டாகுமா?” எனும் தலைப்பில் இந்தியாவின் மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் செய்தி ஒன்றை ஏற்கனவே வெளியிட்டது
அதில் ” COVID-19 தடுப்பூசிகளில் ஊசி போடப்பட்ட இடத்தில் மின்காந்த புலத்தை உருவாக்கக்கூடிய தன்மை இல்லை. அனைத்து COVID-19 தடுப்பூசிகளிலும் உலோகம் போன்ற மூல பொருட்கள் இல்லை. COVID-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டால் காந்த திறன் உண்டாகாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) யும் இந்த கூற்றுக்களை “ஆதாரமற்றது” என மறுத்துள்ளது.
Several posts/videos claiming that #COVID19 #vaccines can make people magnetic are doing the rounds on social media. #PIBFactCheck:
✅COVID-19 vaccines do NOT make people magnetic and are completely SAFE
Register for #LargestVaccineDrive now and GET VACCINATED ‼️ pic.twitter.com/pqIFaq9Dyt
— PIB Fact Check (@PIBFactCheck) June 10, 2021
Links:
https://www.cdc.gov/coronavirus/2019-ncov/vaccines/facts.html
https://www.bbc.com/hindi/india-57435594.amp
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.