Nataraj & Apsara ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவையா ?

பள்ளிப் பருவத்தில் பேனாவைப் பயன்படுத்துவதற்கு முன்பாக குழந்தைகளின் எழுத்துக்கள் பென்சில் கொண்டு தீட்டப்படுகின்றன. பள்ளியில் சிறு வகுப்பு தொடங்கி கல்லூரி வரை என பென்சில் பயன்பாடு மிக முக்கியமானவை என்பதை அனைவரும் அறிவர்.
பென்சில் என்றாலே நம் நினைவிற்கு வருவது வெகு சில பிராண்ட்கள் மட்டுமே.. குறிப்பாக கருப்பு , சிவப்பு நிறத்திலான Nataraj பென்சில் போன்றவை இன்றைய தலைமுறையினரின் நினைவில் நீங்கா இடம் பிடித்தவை என்றே கூறலாம். எளிமையான தோற்றம் மற்றும் விலை என அனைவரிடத்திலும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்குகிறது. பென்சில் மட்டுமின்றி Eraser, sharpeners , scale, பேனா என பள்ளிப் பாடத்திற்கு பயன்படும் அனைத்து பொருட்களும் Nataraj பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
Nataraj பென்சில் உபயோகப்படுத்திய காலத்தில் புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பென்சில் Apsara . Nataraj-ஐ போன்றே எழுது பொருட்கள் அனைத்தும் apsara பிராண்ட் மூலம் விற்பனைக்கு வந்தன. Nataraj பென்சிலுக்கு போட்டியாகவே Apsara பென்சில் விற்பனைக்கு வந்தது என பலரும் நினைப்பது உண்டு. அந்த அளவிற்கு விற்பனையில் கொடிக்கட்டி பறந்தன. விலையும் அதிகம் பா என்றுக் கூறியதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
” Nataraj மற்றும் Apsara பற்றிய ஓர் தகவலை பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. இரு பிராண்டும் வெவ்வேறு நிறுவனங்கள் என நினைத்து கொண்டு உள்ளோம். ஆனால், இவ்விரண்டு பிராண்டுகளும் ஹிந்துஸ்தான் பென்சில் நிறுவனத்தை சேர்ந்தவையாகும் “.
1958 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் பென்சில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பென்சில் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் முன்னணி பிராண்டுகளாக உள்ள Nataraj மற்றும் Apsara -ன் எழுது பொருட்கள் உலகம் முழுவதும் உள்ள 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஹிந்துதான் பென்சில் நிறுவனத்தின் முதல் பிராண்டாக கொண்டுவரப்பட்டது Nataraj. இதன் நோக்கம் குறைந்த விலையில் அனைவருக்குமான பென்சில் என்பதே..!!
1970 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதே உயர் மதிப்புடைய Apsara பிராண்ட் எழுது பொருட்கள். முதன் முதலில் Apsara பிராண்டில் ஓவியம் வரைவதற்கான பென்சில்களே விற்பனைக்கு வந்தன. 1990-களில் எழுது பொருட்கள் அனைத்தும் apsara பிராண்ட் பெயரில் விற்பனைக்கு வந்தது.
Nataraj மற்றும் Apsara ஆகியவை வெவ்வேறு நிறுவனத்தை சேர்ந்தவை என இன்று வரை நினைத்து வளர்ந்த குழந்தைகளுக்கு இரண்டும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவை என்பது ஆச்சரியமான தகவலே..!!
Proof : https://www.hindustanpencils.com/