தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் தமிழ் மொழிப்பெயர்ப்பு !

தேசியக் கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அது குறித்த விவாதங்களும், பேச்சும் முதன்மையாகி உள்ளது. இதுவரை, தேசியக் கல்விக் கொள்கை 2020 தமிழ் மொழியில் அதிகாரப்பூர்வமாக மொழிப்பெயர்த்து வெளியாகவில்லை.
தேசியக் கல்விக் கொள்கையை அரசு தமிழில் அதிகாரப்பூர்வமாக மொழிப்பெயர்த்து வெளியிடுவதற்கு முன்பாக உமாநாத் செல்வன் உள்பட 50 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து 60 மணி நேரத்தில் அதனை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு உள்ளனர். வரிக்கு வரிக்கு இரண்டு மூன்று நபர்கள் திருத்தும் செய்தே இணையத்தில் வெளியிட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை வரைவு வெளியான போதும் தன்னார்வலர்கள் மக்களுக்காக வரைவை மொழிப்பெயர்வு செய்து வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிஙக் : NEP_2020_Tamil_PrivateTranslation (1)
Drive link : https://drive.google.com/file/d/1Qphvg292JRSIQmmUDnNokR584EorYSLa/view?usp=drivesdk
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.