ஊழியர்களுக்கு நவராத்திரி ஆடை நிற உத்தரவு.. எதிர்ப்பால் பின்வாங்கிய யூனியன் பேங்க் ஆப் இந்தியா !

அக்டோபர் 7 முதல் 15-ம் தேதி வரை நவராத்திரி தினங்களில் ஒன்பது நாட்களுக்கும் ஒவ்வொரு நிறத்தில் வங்கி ஊழியர்கள் உடை அணிந்து வர வேண்டும், மீறினால் ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் ஏ.ஆர். ராகவேந்திரா வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சுற்றறிக்கை குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கக் கூறியும் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். சமூக வலைதளங்களில் சுற்றறிக்கைக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், வழக்கம் போல் அதற்கு இந்து மக்கள் கட்சி உள்ளிட்டோர் எதிர்வினையாற்றவும் தவறவில்லை.
This poster is giving heart burns for Dravidam…. Nice to see the woke outrage…. LoL pic.twitter.com/bCdPUtIWCI
— Indu Makkal Katchi (Offl) 🇮🇳 (@Indumakalktchi) October 9, 2021
இந்நிலையில், நவராத்திரிக்கு ஊழியர்களுக்கு உடை நிற கட்டுப்பாடு விதித்த சுற்றறிக்கையை யூனியன் பேங்க் ஆப் இந்தியா பின்வாங்கி இருக்கிறது.
நவராத்திரி குறித்த சுற்றறிக்கையை வாபஸ்பெற்றது யூனியன் வங்கி நிர்வாகம் .
தவறை முன்பே திருத்திக் கொண்டது போல் 7 ஆம் தேதி எனக் குறிப்பிட்டு இன்று மதியம் 2 மணிக்கு வெளியிட்டுள்ளது.
அரசு விதிகளை மீறி இச்சுற்றறிக்கையை வெளியிட்டவர் மீதான நடவடிக்கையை உறுதிபடுத்துவோம். #UBI pic.twitter.com/qj9klLkaoW
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 9, 2021
இதுகுறித்து, எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டர் பக்கத்தில், ” நவராத்திரி குறித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது யூனியன் வங்கி நிர்வாகம் . தவறை முன்பே திருத்திக் கொண்டது போல் 7 ஆம் தேதி எனக் குறிப்பிட்டு இன்று மதியம் 2 மணிக்கு வெளியிட்டுள்ளது. அரசு விதிகளை மீறி இச்சுற்றறிக்கையை வெளியிட்டவர் மீதான நடவடிக்கையை உறுதிபடுத்துவோம் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.