நீட் மசோதாவிற்கு தமிழக பாஜக ஆதரவு அளித்ததாக தவறான தகவலைப் பேசிய எம்பி டி.ஆர்.பாலு !

நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ரவி மீண்டும் சபாநாயருக்கே திருப்பி அனுப்பியது பரபரப்பையும், கண்டனத்தையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், நீட் விலக்கு விவகாரத்தில் ஆளுநர் ரவியின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருக்கிறார். எம்பி டி.ஆர்.பாலு தன் உரையின் போது, நீட் விலக்கு மசோதாவிற்கு தமிழக சட்டமன்றத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளித்து உள்ளனர், ஏன் தமிழக பாஜக கூட ஆதரவு தெரிவித்து உள்ளதாக தவறான தகவலைப் பேசி உள்ளார்.
2021 செப்டம்பர் 13-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசால் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு அதிமுகவினர் ஆதரவு அளித்தனர், ஆனால் பாஜகவின் 4 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
We walked out of the assembly , when the govt has brought the bill .
Why https://t.co/x5E8ZLuqda Balu is misleading ??
Last month in all party meeting @BJP4TamilNadu
strongly protested against the bill and walked out .மாணவர்களை ஏமாற்றுவது பத்தாதுன்னு பாராளுமன்றத்தையுமா ? https://t.co/5wsoRjgcca
— Vanathi Srinivasan (@VanathiBJP) February 4, 2022
இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், ” அரசு மசோதாவை கொண்டு வந்த போது சட்டசபையில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம். கடந்த மாதம் நிகழ்ந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் தமிழ்நாடு பாஜக மசோதாவிற்கு எதிராக போராடி, வெளிநடப்பு செய்தோம் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.