நீட் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் பதவி விலகுவேன் எனக் கூறியதாகப் போலிச் செய்தி !

தமிழகத்தில் நீட் தேர்வை நீக்கும் வகையில் மீண்டும் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில், நீட் விவகாரத்தில் ஆளுநர் பதவி விலக வேண்டும் இல்லையெனில் முன்னாள் முதல்வரை போல இல்லாமல் நான் பதவி விலகி தமிழக மாணவர்களின் சமூக நீதியை காப்பேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக சன் நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
I dare him to do that and face the elections right away . Not even 1/3 rd of the present mlas of dmk will get elected. https://t.co/PNYLe3Ci9z
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) February 8, 2022
விடியல் மாமா @mkstalin இது உண்மையா? எப்போ பதவி விலக போறீங்க? pic.twitter.com/8ieRJ3w74V
— 🛕Johny Bhai(Boyapati) *JRN*🇮🇳🚩 (@johnyraja) February 8, 2022
இது உண்மையா இருந்தா நா கும்பிட்ட என் முருகன் செவி கொடுத்துள்ளான்🦚🦚.
நா வேண்டினது வீன் போகல🙏🏻🙏🏻..
ஓம் சரவண பவ🙏🏻 pic.twitter.com/2DeqMNRmK0— 🇮🇳JAYACHANDRAN🚩 (@_JAYACHANDRAN_V) February 9, 2022
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து சன் நியூஸ் சேனலில் தேடிப் பார்க்கையில், அவ்வாறான செய்திகள் இடம்பெறவில்லை. 2022 பிப்ரவரி 3-ம் தேதி ஆளுநர் குறித்து முதல்வர் பதிவிட்ட ட்வீட் குறித்த நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.
“பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவுநாளில், ” ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா ” என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் ” என வெளியான கார்டில் எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், நீட் விவகாரத்தில் ஆளுநர் பதவி விலக வேண்டும் இல்லையெனில் முன்னாள் முதல்வரை போல இல்லாமல் நான் பதவி விலகி தமிழக மாணவர்களின் சமூக நீதியை காப்பேன் எனக் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.