ஐ.பி.எல்க்கு சிறப்பு ரயில், நீட்க்கு கிடையாது. ஆனாலும், குவியும் உதவிகள்.

நீட் தேர்வு மாணவர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது. மாணவர்கள் வெளி மாநிலத்திற்கு அலைந்து திரியும் நேரம், செலவு போன்ற பல இன்னல்கள் கடைசி நேர மன உளைச்சல் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் நடந்த தவறு. எனினும், இப்போது என்ன செய்வது என்ற கேள்விக்கு பதில் தருவதுதான் சரியாக இருக்கும் இந்த நேரத்தில்.

Advertisement

இதைக் கருத்தில் கொண்டு பலரும் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். அவை என்ன அதை மாணவர்களுக்கு பயன் உள்ளதாக ஆக்க என்ன செய்ய வேண்டும். நாம் youturn மூலம் JBA Steels நிறுவனத்தை தொடர்பு கொண்டோம். அவர்கள் தங்களால் ஆன உதவியை செய்ய முன் வந்தார்கள். அப்படி உதவி தேவைப்படும் மாணவர்கள்youturnmedia@gmail.com க்கு தொடர்பு கொண்டால் உதவி செய்யப்படும்.

அரசாங்கத்தின் மூலம் என்ன என்ன உதவிகள் கிடைக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். சிறப்பு ரயில் ஏதும் இயக்கப்படவில்லை, ஐ.பி.எல்-க்காக சிறப்பு ரயில்கள் இயங்கிக் கொண்டிருப்பதாலும், அது தற்போது வட மாநிலத்தில் உள்ளதாலும் சிறப்பு ரயிலுக்கு வாய்ப்பு இல்லை என்கிறது தென்னக ரயில்வே.

ஆனால், நெல்லையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு பேருந்தும், மாலையில் இரண்டு பேருந்தும் வரும் 6-ம் தேதி வரை இயங்கும் என அமைச்சர் திரு.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பாக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் (மாணவர்& ஒரு நபருக்கு) மற்றும் இதரச் செலவுக்கு ஆயிரம் ரூபாய் ஒரு மாணவருக்கு பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை முதல்வர் அறிவித்துள்ளார். இதை அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் மூலமாக முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம். சென்று வந்து போதிய ரசீதுகளை காட்டியும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவை நீட் தேர்வின் நுழைவுச் சீட்டு நகல் மற்றும் பள்ளியின் அடையாள அட்டை நகல். இதில் சிக்கலிருக்கும் எனில் Helpline no: 14417 தொடர்பு கொள்ளலாம்.

திரு.டி.டி.வி தினகரன் நீட் தேர்விற்காக கேரளா செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள 93631 09303 , 99942 11705, 73738 55503..

Advertisement

நாகைத் தொகுதியில் இருந்து நீட் எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவியை பெற தம்மை உடனே அணுகலாம் என தமின்முன் அன்சாரி தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள 99407 38572 , 90920 20923, 04365 247788.

நீட் தேர்விற்கு வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி( போகவும், திரும்பவும்) அக்னி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் தகவலுக்கும், தொடர்பு கொள்ள 9962052572, 9790838308, 8248225258..

அண்டை மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தமிழகத்தைச் சார்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு போஸ் மக்கள் பணியகம் உணவு, ரயில் போக்குவரத்து உதவி செய்து தருகிறது. தொடர்புக்கு- 004 48622394.

வெளி மாநிலங்களுக்கு நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதவிருக்கும் ஏழை மாணவர்களுக்கு மக்கள் பாதை சார்பாக உதவிகள் செய்ய தயாராக உள்ளனர். தொடர்புக்கு, 74483 33541, 79047 58413.

கரூர் மாணவ மாணவிகள் பேருந்து மற்றும் தங்கும் இட வசதிகளை பெற கரூர் வி.செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ தொடர்புக்கு- 9442239911.

கேரளா மற்றும் ராஜஸ்தான் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள். தொடர்புக்கு- 96777208927

சிங்கபூர் இணையக் குழு சார்பில் பஸ் வசதி ஏற்பாடு செய்து தரப்படுகிறது. தொடர்புக்கு- +6591834946 or 9655333311.

உதவி செய்பவர்களின் விவரங்கள் இங்கே: கிளிக் செய்யவும்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close