நீட் ஓ.எம்.ஆர் சீட்டே மாறி உள்ளதாக கோவை மாணவன் மனோஜ் புகார் !

2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிய போது தேர்ச்சி புள்ளி விவரங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது தெரியவந்து சர்ச்சையாகியது. இதையடுத்து, குளறுபடிகள் உடன் வெளியான முடிவுகளை நீக்கி விட்டு திருத்தப்பட்ட முடிவுகளை என்.டி.ஏ மீண்டும் வெளியிட்டது. இந்நிலையில், கோவை மாணவன் மனோஜ் தன்னுடைய ஓ.எம்.ஆர் விடைத்தாளே மாறியுள்ளதாக புகார் தெரிவித்து இருக்கிறார்.
கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் கே.எஸ்.மனோஜ் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வை எழுதி இருந்துள்ளார். நீட் தேர்வின் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் 11-ம் தேதி ஓ.எம்.ஆர் சீட்டை பதிவிறக்கம் செய்து தனியார் பயிற்சி மையம் வெளியிட்ட விடைகளை ஒப்பிட்டு பார்க்கையில் 720-க்கு 594 மதிப்பெண்கள் பெறுவேன் என நினைத்துள்ளார்.
ஆனால், அக்டோபர் 16-ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவில் 248 மதிப்பெண்கள் மட்டுமே காட்டியுள்ளது. இதனால், மீண்டும் ஓ.எம்.ஆர் சீட்டை பதிவிறக்கம் செய்த போது முன்பு எடுத்த ஓ.எம்.ஆர் சீட்டிற்கும், தற்போதுள்ள சீட்டிற்கும் வித்தியாசம் உள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, தேசிய தேர்வு முகமையின் டோல் ஃபீர் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது முறையான பதில் இல்லை. ஓ.எம்.ஆர் சீட் மாறியுள்ளது குறித்து மெயில் மூலம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவதாக திநியூஇந்தியன்எக்ஸ்பிரஸ் செய்திக்கு மாணவன் மனோஜ் தெரிவித்து இருக்கிறார்.
கோவை மாணவன் மனோஜ் தன்னுடைய ஓ.எம்.ஆர் சீட்டே மாறியுள்ளதாக வெளியிட்ட குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரே பதிவு எண் கொண்ட இருவேறு ஓ.எம்.ஆர் சீட்கள் பகிரப்பட்டு வருகின்றன.
நீட் எனும் பித்தலாட்டம்.
கோவை மனோஜ் என்ற மாணவன் முதலில் NTA வலைதளத்திலிருந்து Oct 15 தரவிறக்கம் செய்த OMR தாளுக்கும் Oct 17 தரவிறக்கம் செய்த OMR தாளுக்கும் வித்தியாசம் இருப்பதாக புகார் எழுப்பியிருக்கிறார்.
அதே நம்பர் இரு தாள்களிலும்.
ஆனால் OMR தாள்களில் மாறுதல்கள்! pic.twitter.com/A0q2XZvImw— இசைப்பிரியன் (@samcharly51) October 18, 2020
அரியலூர் மாவட்டதைச் சேர்ந்த மாணவி மஞ்சு 12-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 299 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்விற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தவர் 2020 நீட் தேர்வை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் எழுதி இருந்தார். தேர்வு முடிவில் மஞ்சு 37 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாக வெளியாகி இருக்கிறது. ஆனால், தேர்வு முடிவில் குளறுபடிகள் இருப்பதாக மஞ்சு கூறுகிறார்.
Links :
OMR sheet doctored, alleges Coimbatore medical aspirant
Inconsistencies in NEET answer sheets alleged
NEET 2020: ‘My OMR answer sheet tampered with’
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.