This article is from Sep 23, 2021

நீட் தேர்வில் மெகா மோசடி.. ஆள்மாறாட்டத்திற்கு ரூ.50 லட்சம்.. கண்டுபிடித்த சிபிஐ !

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. எப்போதும் போல், இந்தமுறையும் நீட் தேர்வில் முறைகேடுகள் நிகழ்வது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.கே.எஜுகேஷன் கேரியர் கைடன்ஸ் எனும் பயிற்சி மையம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத மாணவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் பெற்றுள்ளதாக அந்த பயிற்சி மையத்தின் இயக்குனர் பரிமல் கோட்பள்ளிவார் மற்றும் மாணவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

அந்த பயிற்சி நிறுவனம், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடம் இருந்தும் ரூ.50 லட்சம் வரை வசூலித்து உள்ளதாகவும், வேறொரு நபரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. திட்டமிட்ட தேர்வு மையங்கள் கிடைப்பதற்கான பயிற்சி மையங்களில் இருப்பவர்களே மாணவர்களின் விண்ணப்பங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து இருக்கிறார்கள்.

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யும் வகையில் மாணவர்களின் விண்ணப்பங்களில் இருக்கும் புகைப்படங்களை மாற்றி மற்றும் ஆதார் அட்டையின் தகவல்களைக் கொண்டு போலியான அடையாள அட்டையை தயார் செய்து இருக்கிறார்கள். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத இருந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சில மாணவர்களுக்கு விடை குறித்த தகவல்களை அளித்ததை பயிற்சி மையம் தரப்பில் ஒப்புக் கொண்டதாக சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 5 மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத பயிற்சி மையம் திட்டமிட்டு இருந்துள்ளது. ஆனால், இதனை அறிந்த சிபிஐ அவர்களை பிடிக்க அந்த தேர்வு மையங்களில் காத்திருந்துள்ளனர். ஆனால், இதை அறிந்து கொண்டதால் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் தேர்வு மையங்களுக்கு வரவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பயிற்சி மையத்தில் சிபிஐ சோதனை நடத்தி இயக்குனர் பரிமல் கோட்பள்ளிவார் மற்றும் மாணவர்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க : ரூ.35 லட்சத்திற்கு நீட் வினாத்தாள் விற்பனை!

இதேபோல், சமீபத்தில் நீட் தேர்வின் வினாத்தாள் 35 லட்சத்திற்கு விற்கப்பட்ட முறைகேடு சம்பவம் தெரியவந்தது. நீட் தேர்வில் முறைகேடு மற்றும் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வந்தாலும், தொடர்ந்து அந்த குற்றத்தை செய்ய பலரும் முனைகின்றனர்.

மேலும் படிக்க : “நீட்” ஆல் பாதிக்கப்படும் தமிழ்வழி மற்றும் கிராமப்புற மாணவர்கள் – ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கை !

நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கை தெரிவித்து இருந்தது. அந்த அறிக்கையை வைத்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.

Links :

major-scam-in-neet-medical-exams-found-says-cbi-amid-student-suicides

after-jee-mains-cbi-unearths-neet-racket-4-arrested

Please complete the required fields.




Back to top button
loader