Read in English

“நீட்” சரியான புள்ளிவிவரங்கள் !

நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக திரு.ரங்கராஜ் அவர்கள் ” நீட்டும், தவறான புள்ளிவிவரங்களும் ” எனும் தலைப்பில் வெளியிட்ட வீடியோ தொடர்பாக சரியான புள்ளிவிவரங்கள் என்ன என்பதை ஆதாரத்துடன் விளக்கி யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் பேசி இருந்தார். அந்த வீடியோவில் பேசப்பட்ட சரியான புள்ளி விவர தரவுகளை தொகுத்து இக்கட்டுரையை விரிவாக எழுதி உள்ளோம்.

Advertisement

மெடிக்கல் டூரிசம் : 

தமிழகத்தில் மெடிக்கல் டூரிசம் அதிகமாக நடக்கிறது, மருத்துவ வசதி எவ்வளவு சிறந்து இருந்தால் இங்கு மெடிக்கல் டூரிசம் அதிகம் நடக்கும் என யூடர்ன் ஆசிரியர் பேசிய தகவலுக்கு, அவை தனியார் மருத்துவமனையில் தானே நடக்கிறது, அரசு மருத்துவமனையில் நடக்கவில்லையே என திரு.ரங்கராஜ் பேசி இருந்தார்.

இந்தியாவில் மருத்துவப் படிப்பை அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே படிக்க மாணவர்களும், பெற்றோர்களும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் அல்ல. இங்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவே போராட்டங்கள் நிகழ்கின்றன. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் கூட பெரும்பாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களே. ஏனெனில், அரசு மருத்துவக் கல்லூரிகளில்தான் இலவசமான மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு விதமான நோயாளிகளையும் பார்க்க முடியும். ஆகையால், அங்கு மருத்துவ மாணவர்களுக்கு நிறைய அனுபவ ரீதியிலான கற்றல் அதிகம் கிடைக்கும். அரசு மருத்துவக் கல்லூரி போல தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுபவம் மூலம் கற்பது குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளன. மெடிக்கல் டூரிசத்தில் தமிழகம் சிறப்பாக இருப்பதாக கூறுவதற்கு எதிராக பேசவே தனியாரை முன்னிலைப்படுகிறார்கள்.

நீட் பிறகு படிப்பு முக்கியம், பணம் குறைவா ? 

நீட் வந்த பிறகு மதிப்பெண்கள், படிப்பு முக்கியம், பணம் குறைவாக இருக்கிறது என்கிற தவறான தகவலை திரு.ரங்கராஜ் பேசி இருக்கிறார்.

Advertisement

2018-ம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியாவில், ” ஒரு எம்பிபிஎஸ் சீட்டிற்கு இயற்பியலில் 5%, உயிரியலில் 20% இருந்தால் கூட போதும் ” எனும் தலைப்பில் வெளியான செய்தியில், இயற்பியலில் 5%, வேதியியலில் 10%, உயிரியலில் 20% வாங்கியவர்களால் கூட நீட் மூலமாக மருத்துவச் சீட்டை பெற முடிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இப்படி நடந்து இருக்கிறது. இந்த சதவீத முறையில் பெரிய குழப்பம் இருக்கிறது என வெளியிட்டு இருக்கிறார்கள்.

2018-ம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான மற்றொரு செய்தியில், நீட் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட மருத்துவ சீட்டுகளை பெறுகிறார்கள் என வெளியாகி இருக்கிறது. ஒரு தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில், ” தனியார் கல்லூரியில் சேர்ந்த 1990 மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலில் 400 மாணவர்கள் இயற்பியலிலும், வேதியியலிலும் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள், 110 மாணவர்கள் உயிரியலில் 0 அல்லது நெகட்டிவ் மதிப்பெண்களை பெற்றும் மருத்துவம் படிக்கிறார்கள் ” என வெளியாகி இருக்கிறது.

நீட் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் உருவாகுவார்கள் எனக் கூறி விட்டு நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் மருத்துவம் படிக்கிறார்கள். இதுவே முன்பிருந்த மதிப்பெண் அடிப்படையிலான முறை என்றால், இயற்பியல், வேதியியல், உயிரியல் என மூன்று பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்றால் தான் அதிக கட்-ஆப் உடன் மருத்துவ சீட்டு கிடைக்கும். நீட் தேர்வால் தனியார் கல்லூரிகள் சரியாக செயல்படுகின்றன எனக் கூறுவது பொய்யென தெளிவாகிறது.

தனியார் கல்லூரி கட்டணங்கள் : 

நீட் தேர்விற்கு ஆதரவாக பேசுபவர்கள் பெரும்பாலும் கூறும் கருத்து நீட் வந்த பிறகு தனியார் கல்லூரிகளால் அதிக கட்டணம் வசூலிக்க முடியவில்லை என்பதே. ஆனால், அதிலும் தரவுகள் வேறாக உள்ளன.

2018-ல் தனியார் கல்லூரிகளில் ஒரு ஆண்டிற்கு 12.50 லட்சம் வரை வாங்குவதாக கூறுகிறார்கள். ஆண்டுக்கு 12.50 லட்சம் என்றால் 5 ஆண்டுகளுக்கே 60 லட்சத்தையும் தாண்டியும் செல்கிறது. சட்டத்திற்கு புறம்பாக தனியார் கல்லூரிகள் நன்கொடை வாங்குகிறார்கள், அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் எனக் கூறி வந்தார்கள். ஆனால், தற்போது சட்டரீதியாகவே 60 லட்சத்திற்கும் மேல் வாங்குகிறார்கள்.

அடுத்ததாக நேஷனல் மெடிக்கல் கமிஷன் பில்(NMC) 2019-ன் படி, தனியார் மற்றும் தன்னாட்சி முறையில் இயங்கும் கல்லூரிகளில் உள்ள 50 சதவீத சீட்டிற்கு மட்டும் தான் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் குறித்து அரசு முடிவு செய்யும். மீதலுள்ள சீட்களுக்கு அரசு நிர்ணயம் ஏதும் செய்யாது.

ஜெயலலிதா : 

தமிழகத்தில் 253 மக்களுக்கு 1 மருத்துவர் வீதம் இருக்கிறார்கள். ஆனால், உலக சுகாதார அமைப்பே 1000 மக்களுக்கு 1 மருத்துவர் என்கிற விகிதத்தை தான் பரிந்துரை செய்து இருந்தது. ஆக, 253 மக்களுக்கு 1 மருத்துவர் என்ற விகிதத்தில் தமிழகம் சாதித்து இருக்கிறது. இதை சாதித்தது தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என திரு.ரங்கராஜ் தெரிவித்து இருந்தார்.

அதே ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தவரை நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வந்தவர். பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில், ” நீட் தேர்வு வந்தால் பெருநகரங்களில் உள்ள வசதிப்படைத்தவர்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும் ” எனக் கூறி இருக்கிறார்.

மத்திய அரசின் செலவு :

மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு 60% அளவிற்கு செலவு செய்கிறது என திரு.ரங்கராஜ் கூறிய தகவல் மறுக்க முடியாதது. ஆனால், மத்திய அரசு செலவிடுவது நம் வரி பணமே. அதிலும், வேறுபாடுகள் காட்டப்படுவதாக தொடர்ந்து குரல்கள் எழுகின்றன.

இந்தியாவில் வளர்ந்த மற்றும் அதிக வருவாய் அளிக்கும் மாநிங்களில் தென்னிந்திய மாநிலங்களே முதன்மையாக இருக்கின்றன. குறிப்பாக, 2016-ல் தமிழகத்தின் தரப்பில் மத்திய அரசிற்கு அளிக்கப்படும் வரி பணத்தில் 1 ரூபாய்க்கு 40 பைசா மட்டுமே தமிழகத்திற்கு திருப்பி அளிக்கப்பட்டது. 2018-ல் அதே ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே திருப்பி அளிக்கப்படுகிறது. இனி எவ்வளவு வரும் என்பது கேள்விக்குறியே.

தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 1 ரூபாய் வாங்கினால் திருப்பி அளிப்பது 29 பைசா, 40 பைசா எனக் கொடுத்து விட்டு, வடமாநிலங்களுக்கு 1.50 என அளிக்கிறார்கள்.

நீட் தேர்ச்சி : 

நீட் தேர்வில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மாணவர்களில் பயிற்சி மையங்களில் சேராமல் 48 மாணவர்கள் தேர்ச்சி பெற முடிகிறது எனப் பெருமையாக சொல்கிறார். ஆனால், வெறும் 1.6 சதவீத மாணவர்கள் மட்டும் பயிற்சி மையம் இல்லாமல் தேர்ச்சி பெற முடிகிறது. 98.4% பேர் நீட் பயிற்சி மையங்களின் மூலமே தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்கிற நிலையே தவறானது.

வகுப்பு வாரியாக அரசு & தனியார் பள்ளி மாணவர்கள் விகிதம் :

2017-ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் தனியார் மற்றும் அரசு பள்ளியில் பங்கேற்ற மாணவர்களை வகுப்பு வாரியாக பார்க்கையில், முன்னேறிய வகுப்பினரில் 74% மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் 40% மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் 25% மாணவர்களும், பட்டியல் இனத்தவரின் 15% மாணவர்களும் தனியார் பள்ளியில் பயில்கிறார்கள் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அறிய முடிந்தது.

மேலும் படிக்க :  இட ஒதுக்கீடு எதற்காக ? | யார் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் !

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 3% மட்டுமே முன்னேறிய வகுப்பினர் இருக்கிறார்கள்.

முழுமையான காணொளி :

Proof links : 

http://164.100.47.4/billstexts/lsbilltexts/asintroduced/185_2019_LS_Eng.pdf

http://www.tnhealth.org/online_notification/notification/N1706869.pdf

NEET: Zero marks in physics, chemistry could still get you a MBBS seat

For an MBBS Seat, you need just 5% in physics, 20% in biology

some MBBS students got 0 or less in NEET papers

Revenue sharing : Are states in south india being taken for a ride ?

இரண்டு கைகளையும் இழந்தவருக்கு மாற்று கை பொருத்தி அரசு மருத்துவமனை சாதனை: விஜயபாஸ்கர் பெருமிதம்

Jayalalithaa opposes attempts to introduce NEET

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button