12-ம் வகுப்பு தாவரவியல் பாடத்தில் “நெல்” ஜெயராமன் பற்றி குறிப்புகள் !

பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கி மேற்கொண்ட தன் பணியால் அதற்காக புகழினை பெற்றவர் நெல் ஜெயராமன். பல அரிய வகையிலான பாரம்பரிய நெல்களை காப்பாற்றி வந்த நெல் ஜெயராமன் அவர்கள் கடந்த வருடம் இயற்கை எய்தினார்.

Advertisement

இந்நிலையில், 12-ம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்பது தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில், ஆராய்ச்சியாளர்கள் நாமன் போலக், எஸ்.எம்.சுவாமிநாதன் மற்றும் ” நெல் ” ஜெயராம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

12-ம் வகுப்பு தாவரவியல் பாடநூலில், இவர் நெல் ஜெயராமன் : இவர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அதிரங்கம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர். இவர் Dr.நம்மாழ்வார் அவர்களின் சீடராவார். இவர் ” நமது நெல்லைப் பாதுகாப்போம் இயக்கத்தின் ” தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் அயராது பாடுபட்டவர். இவர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களின் நிலங்களில் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்துக் கொண்டு அவற்றிற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

2005 ஆம் ஆண்டில் முதன் முதலில், இவர் தனது பண்ணையில் தனியொருவராக ” நெல் விதை திருவிழாவை ” நடத்தினார். 10-வது திருவிழாவானது 2016-ல் அதிரங்கம் என்ற அவருடைய கிராமத்திலேயே நடைபெற்றது. இத்திருவிழாவில் தமிழ்நாட்டிலுள்ள 7000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 156 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில்(IRRI) உரையாற்றுவதற்காக பிலிப்பைன்ஸ் அரசு இவரை அழைத்தது. 2011-ஆம் ஆண்டு இவர் சிறந்த இயற்கை விவசாயத்திற்கான மாநில விருதைப் பெற்றார். 2015-ம் ஆண்டு சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருதையும் பெற்றார். இவ்வாறு பாடநூலில் இடம்பெற்று உள்ளது.

” வேளாண் விஞ்ஞானி ” எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார் என்று பாடநூலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ” நெல் ” ஜெயராமன் அவர்களின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்ததற்கு நெல் ஜெயராமன் அவர்களின் மனைவியும், மகனும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Nel Jayaraman finds a place in Class XII botany textbook

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button