This article is from Dec 05, 2018

நெல் ஜெயராமன் உயிருடன் உள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நெல் ஜெயராமன் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், ஊடங்களிலும் கூட அவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகிறது.

ஆனால், பல தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. விவசாய நல சங்கம் தலைவர் பி.ஆர் பாண்டியன் போன்றோர் மறுத்து செய்தி வெளியிடுகின்றனர்.  நெல் ஜெயராமன் உயிருடன் உள்ளார். அவரின் சகோதரர் மகனும் இதனை உறுதி செய்துள்ளார்.

ஆகையால், தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.  அவரின் உடல் ஆபத்தான நிலையில் உள்ளது என YOUTURN தரப்பிற்கு வந்த தகவல். எனவே, மக்கள் தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

Update :

நேற்று நெல் ஜெயராமன் இறந்ததாக வதந்தி பரவியது. உண்மையில், இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார். YouTurn சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Please complete the required fields.




Back to top button
loader