தேசியக் கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம்!

மத்திய அரசு வெளியிட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020 தொடர்பாக ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகையில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார். எனினும், புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநில பள்ளிக்கல்வி செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக நாளை (24/08/2020) முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். இதற்காக இணையதள முகவரியும் அளிக்கப்பட்டு உள்ளது. தன்னார்வலர்கள் தேசியக் கல்விக் கொள்கையை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு உள்ளனர். அதனுடைய லிங்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : https://innovateindia.mygov.in/nep2020/
தேசியக் கல்விக் கொள்கை 2020 (தமிழில்) : NEP_2020_Tamil_PrivateTranslation (1)
Drive link : https://drive.google.com/file/d/1Qphvg292JRSIQmmUDnNokR584EorYSLa/view?usp=drivesdk