This article is from Apr 24, 2021

17 மொழிகளில் வெளியான தேசிய கல்விக் கொள்கை 2020.. தமிழ் இடம்பெறவில்லை !

கடந்த ஆண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை 2020ஐ ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே மத்திய அரசு வெளியிட்டது. ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடவில்லை என எதிர்ப்புகள் பல எழுந்தன. எனினும், கடந்த ஆண்டு தமிழக தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தேசிய கல்விக் கொள்கையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை வெளியாகி எட்டு மாதங்களுக்கு பிறகு மாநில மொழிகளில் கொள்கையை மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்டு இருக்கிறது மத்திய அரசு. மத்திய கல்வி அமைச்சகத்தின் education.gov.in இணையதளத்தில் தேசிய கல்விக் கொள்கையின் 17 பிராந்திய மொழிகளின் மொழிப்பெயர்ப்பு வெளியாகி இருக்கிறது.

தென்னிந்தியாவின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிப்பெயர்ப்பு இடம்பெற்று இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகள் இடம்பெறவில்லை. முன்பே, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

சமீபத்தில்தான், ” NEP 2020 Translation in 17 Regional Languages ” எனும் தலைப்பில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் தமிழ் மொழிப்பெயர்ப்பு !

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தேசியக் கல்விக் கொள்கை வெளியான போது உமாநாத் செல்வன் உள்பட 50 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து 60 மணி நேரத்தில் அதனை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்ட மொழிப்பெயர்ப்பு லிங்க் உடன் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

Please complete the required fields.




Back to top button
loader