“அடுத்த 3 ஆண்டுகளுக்கு உயிருடன் இருங்கள், இறக்காதீர்கள்” என நித்யானந்தா பேசிய பழைய வீடியோ வைரல்.. உண்மை என்ன ?

” தயவு செய்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு உயிருடன் இருங்கள், இறந்து விடாதீர்கள்.. எங்கிருந்தாலும் உயிருடன் இருங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ” என 2018-ல் நித்யானந்தா பேசியதாகவும், அதை தற்போது உள்ள கொரோனா சூழ்நிலை உடன் இணைத்து சிறு வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

இந்தியாவை விட்டு தப்பித்து சென்ற நித்யானந்தா கைலாச எனும் நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக ட்ரோல் மீம்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி ட்ரெண்ட் செய்யப்படும் ஒன்று.

தற்போது கொரோனா வருவதற்கு முன்பாக, ” அடுத்த 3 ஆண்டுகளுக்கு உயிருடன் இருங்கள், இறந்து விடாதீர்கள் ” என நித்யானந்தா பேசிய சிறு பகுதியை வைத்து நகைச்சுவையாக எடிட் செய்து பரப்பி வருகிறீர்கள். எனினும், இது பழைய வீடியோவா, எடிட் செய்யப்பட்டதா, கொரோனா பற்றியா கூறினார் என சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

உண்மை என்ன ?

நித்யானந்தா பேசவும் வீடியோ குறித்து தேடுகையில், 2018 அக்டோபரில் KAILASA’s SPH Nithyananda சேனலில் ” Just Be Alive For The Next 3 Years – Vijaya Dashami 2018 Message ” எனும் தலைப்பில் வெளியான வீடியோவில் இருந்தே சிறு பகுதியை எடுத்து எடிட் செய்து இருக்கிறார்கள். அவர் பேசுவதை முழுவதுமாக பார்க்கவும்.

” அடுத்த மூன்று ஆண்டுகளில் இறக்க வேண்டாம், உயிருடன் இருங்கள். நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை நான் வந்தடைவேன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஞானம் அடைதலுடன் உங்களை சந்திப்பேன் ” எனப் பேசி இருக்கிறார்.

Advertisement

2018-ல் நித்யானந்தா பேசிய இவ்வீடியோ குறித்து ” சுவாமி நித்யானந்தா உங்களை கண்டுபிடித்து 2021ல் உங்கள் மூன்றாவது கண்ணைத் திறப்பார் ” எனும் தலைப்பில் இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில், ” அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு யாரும் இறக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை. நித்யானந்தாவின் அருமையான இலவச சலுகையை சோதிப்போம். உங்கள் இரண்டு கண்களால் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வாழ்வதில் எந்தத் தீங்கும் இல்லை. ஐன்ஸ்டீன் சொல்வது சரி, நித்யானந்தா தவறு என நமக்கு தெரியும். அவரை மீண்டும் தவறானவர் என நிரூபிப்பதில் தவறில்லை ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

சமூக வலைதளங்கள், செய்திகளில் தான் பேசிய வீடியோ ட்ரோல் செய்யப்படுவதைக் குறிப்பிட்டு பேசிய நித்யானந்தா, ” இதை பொது வெளியிலேயே நான் வைக்கிறேன், அடுத்த 3 ஆண்டுகளில் இறந்து விடாமல் உயிரோடு மட்டும் இருங்கள். பரமசிவன் உங்களை ஞானத்துடனும் அறிவியலுடனும் உங்களை வந்து அடைவார் ” என பேசிய வீடியோக்களின் தொகுப்பை 2021 ஏப்ரலில் மீண்டும் பகிர்ந்து வருகிறார்கள்.

2018-ல் நித்யானந்தா பேசிய வீடியோவில் இருந்து சிறு பகுதியை எடுத்து கொரோனாவை கணித்ததைப் போல பகிர்ந்து வருகிறார்கள். கொரோனா வருவதாகவோ அல்லது கொரோனா மரணங்கள் குறித்தே அவர் பேசிய வீடியோவில் குறிப்பிடவில்லை. 3 ஆண்டுகளில் ஞானம் அடைவீர்கள் என்றே நித்யானந்தா பேசி இருக்கிறார். அதையும் நீக்கி, எடிட் செய்து பரப்பி வருகிறார்கள். இதை கொரோனா உடன் தொடர்புப்படுத்தி பரப்புவது சரியல்ல. அவர் கூறியது போன்று, 3 ஆண்டுகளும் நிறைவடைய உள்ளது, இதுவரை ஞானம் அடைந்ததாக தெரியவில்லை.

Links : 

Just Be Alive For The Next 3 Years – Vijaya Dashami 2018 Message

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button