“முஸ்லீம் ஊழியர்கள் இல்லை” வைரலாகும் பேக்கரி விளம்பரம்| பதிலும், நடவடிக்கையும்.

சென்னை தி.நகர் பகுதியில் உள்ள ” Jain Bakeries & Confectioneries ” எனும் பேக்கரியின் சார்பில் வெளியிடப்பட்ட வாட்ஸ் அப் விளம்பரத்தில் ” Made by jains on orders , No muslim staffs ” என்ற வாரத்தை இடம்பெற்று இருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது.

Advertisement

கொரோனா வைரசை பரப்புவதே முஸ்லீம்கள் தான் என போலியான செய்திகள் பல சமூக ஊடங்களில் பரவிய நிலையில் மக்களிடம் தவறான புரிதலே உருவாகி இருந்தது. இந்நிலையில், ஜெயின் பேக்கரி ஒன்று தன் விளம்பரத்தில் முஸ்லீம் ஊழியர்கள் இல்லை எனக் குறிப்பிட்டது மதம் சார்ந்த ஒடுக்குமுறை என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக விளக்கம் கேட்ட அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது இரு எண்களும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேக்கரியின் உரிமையாளர் பிரசாந்த் கைது செய்யப்பட்டு உள்ளதாக பத்திரிகைச் செய்தி வெளியீடு கிடைத்தது.

இதை உறுதி செய்துக் கொள்ள மாம்பலம் ஆர் 1 காவல் நிலையத்திற்கு யூடர்ன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய பொழுது, பேக்கரியின் உரிமையாளர் பிரசாந்த் கைது செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்தனர். விசாரணை நடைபெற்று வருவதாகவும் மேற்கொண்டு தகவல் தெரிவிக்க இயலாது எனத் தெரிவித்து விட்டனர். தற்போது அவர் பெயிலில் வெளியே வந்துள்ளார்.

Jain Bakeries & Confectioneries-யைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு அளித்த தகவலில், ” முஸ்லீம் ஊழியர்களை பயன்படுத்தும் உணவகங்களை குறித்து வெளியான முந்தைய செய்திக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த செய்தி வெளியிட்டதாக கூறி உள்ளார். செளகார் பேட்டையில் இருந்து வந்த மெசேஜில் அங்குள்ள மக்கள் பேக்கரி உணவுகளை தவிர்ப்பதாகவும், அங்கு முஸ்லீம்கள் ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். அதனால் வாடிக்கையாளர்கள் பலர் கேள்வி எழுப்பியதால் தங்களது கடையில் முஸ்லீம்கள் பணியாற்றவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், அதன்பிறகு எங்களுக்கு பல்வேறு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் நாங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம், பிற மதத்திற்கு எதிராக அல்ல. எங்களுக்கு முஸ்லீம் வாடிக்கையாளர்கள் கூட உள்ளனர் எனக் கூறியதாக ” வெளியாகி இருக்கிறது.

Advertisement

” எங்களிடம் முஸ்லீம் ஊழியர்கள் இல்லை ” என வாட்ஸ் அப்பில் வெளியான பேக்கரியின் விளம்பரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி கண்டனங்களை பெற்று வருகிறது.

Links : 

Chennai: Row over bakery’s ‘No Muslim’ staff text

No Muslim staff: Chennai bakery owner arrested for posting offensive ad

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button