This article is from Sep 30, 2018

கொல்லப்படும் அப்பாவி வட மாநில இளைஞர்கள்..!

2012-ல் ஒரு நாள் ஒரு நபரை பிடித்து மரண அடி அடித்தார்கள். அந்த நபரை வட நாட்டு திருடன் என்று சொல்லி அடித்து துவைத்தது குற்றம். கிட்டத்தட்ட மரணத்தின் அருகில் கூட்டிச் சென்றார்கள். வட நாட்டு திருடன் என்ற வார்த்தை அவர் காதில் ஒழித்துக் கொண்டே இருந்திருக்கும். கடைசியில் விசாரித்தால் அவர் பெயர் வெங்கட்ராவ் ஆந்திராவை சேர்ந்தவர். இந்த சம்பவம் நடந்த சில தினங்களுக்கு முன் தான் வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் சிலர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வடநாட்டைச் சேர்ந்தவர்கள். அதன் தாக்கமே இவரையும் வட நாட்டவர் என உறுதி செய்ய காரணம். இந்த பொது புத்தி பல சம்பவங்களால் வளர்ந்து வட நாட்டவர்கள் என்றாலே கிரிமினல்கள் என்று முத்திரை குத்தியுள்ளனர்.

பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்த பின் இவர்களை பற்றிய தகவலை எல்லாம் அருகில் உள்ள காவல்நிலையில் கொடுக்க என்ற கேடு பிடிக்கும் உள்ளானார்கள். சமீபத்தில் புரளியால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இரு நாட்களுக்கு முன்பு தனியாக சுற்றித் திரிந்த வட மாநில இளைஞரை குழந்தையை கடத்தி சென்று நரபலி கொடுப்பவர் என நினைத்து அடித்து காயப்படுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் குழந்தைகளை நரபலி கொடுக்கும் கும்பல் வலம் வருவதாகக் கூறி பரவிய செய்தியை உண்மை என நினைத்து அந்த அப்பாவி இளைஞனை அடித்து காயப்படுத்தி உள்ளனர். போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர் பீகாரில் இருந்து வரும் போது தவறாக குடியாத்தம் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கியதாகக் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை விடுவித்துள்ளனர்.

ஆனால், அதே நாளில் இரவு மற்றொரு பகுதியில் சுற்றித் திரிந்த அந்த இளைஞனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதில், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமையில் சேர்க்கப்பட்ட அந்த வட மாநில இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த குடியாத்தம் போலீசார் இளைஞரை தாக்கியவர்களைத் தேடி வருகின்றனர்.

இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் சின்னையன் சத்திரத்தில் நடந்த சம்பவத்தில் மற்றொரு வட மாநிலத்தவர்அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் அடித்து கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குடியாத்தம் பகுதியில் வட மாநிலத்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்த நிலையில், 40 வயது தக்க பெண்ணை திருடி என்று பொதுமக்கள் தாக்கியுள்ளனர். பின் போலீசார் விசாரணையில் அந்த பெண் விழுப்புரத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிய வந்தது.

2016 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி, கூலித் தொழிலாளிகளாக தமிழகத்தில் குடிபெயர்ந்தவர்கள் சுமார் 10 லட்சம் பேர். இன்று அதற்கும் மேல் இருப்பார்கள். அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மிகக்குறைந்த ஊதியம், 12 மணி நேர வேலை, சிறிய அறையில் பலர் தங்குவது என வீட்டைப் பிரிந்து வாழும் அவர்கள் கடும் உழைப்பாளிகள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் தான் நம்மவர்கள் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இவர்களுக்கான தொழில் பாதுகாப்பு, சம்பள வரைமுறை எதுவும் பெரிதாக இல்லை. இந்த ஊருக்கும், குறைந்த சம்பளத்திற்கும் வழியில்லாமல் தான் குடும்பத்தை விட்டு இங்கு வந்து பிழைப்பை நடத்துகிறார்கள். இப்படியானவர்கள் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே இவர்கள் எல்லாம் தவறானவர்கள் என்ற சிந்தனையில் இருந்து விடுபட வேண்டிய நேரம் இது.

குழந்தையை கடத்தி நரபலியா? வட மாநில இளைஞர் அடித்து கொலை. 

Residents mistake man for robber, beat to him death 

Please complete the required fields.




Back to top button
loader