This article is from Jan 07, 2022

ஓமைக்ரான் லேசானது அல்ல, அது மக்களை கொல்லவும் செய்கிறது : உலக சுகாதார மையம் !

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான ஓமைக்ரான்/ஒமிக்கிரான் பாதிப்பு உலக நாடுகள் பலவற்றில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் டெல்டா வைரசை ஒப்பிடுகையில் ஓமைக்ரான் குறைவான தீவிரத்தன்மையை உருவாக்குகிறது எனக் கூறப்பட்டது. அதற்காக, அதை ” லேசானது ” என வகைப்படுத்த முடியாது என உலக சுகாதார மையம்(WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

Twitter link 

ஜெனிவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், டெல்டா வைரஸ் உடன் ஒப்பிடும் போது ஓமைக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில், இது ” லேசானது ” என வகைப்படுத்தப்பட்ட வேண்டும் என்று அர்த்தமல்ல.
முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஓமைக்ரான் மக்களை மருத்துவமனையில் சேர்க்கிறது மற்றும் அது மக்களைக் கொல்கிறது. உண்மையில், பாதிப்பு வழக்குகளின் பேரலை மிகவும் பெரியது மற்றும் விரைவானது ” எனத் தெரிவித்து இருந்தார்.

அதிகரிக்கும் கூட்டம் மற்றும் குறைவான பணியாளர்கள் கொண்டதாக மருத்துவமனைகள் மாறி வருகிறது. இது தடுக்கக்கூடிய கோவிட்-19 மட்டுமின்றி சரியான நேரத்தில் கவனிப்பைப் பெற முடியாத பிற நோய்கள் மற்றும் காயங்களால் நோயாளிகளின் இறப்புகளுக்கு வழிவகுக்கிறது எனத் தெரிவித்து இருக்கிறார்.
.
உலக அளவில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல நாடுகளில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இரவு நேரம் மற்றும் வார இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Please complete the required fields.




Back to top button
loader