பாரிசாலன் கைது ?

இன்று காலை ஃபேஸ்புக்கில் live-ல் பேசிய பாரிசாலன் வேலூரில் தெலுங்கர்களால் நடத்தப்படும் பஜாஜ் ஷோரூம் ஒன்றில் தனது பைக்கை சர்வீஸ் செய்ய சென்ற பொழுது அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி விட்டனர்.தமிழர்களாகிய நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று பேசி இருந்தார்.
இதன் பின் அவர்கள் தெலுங்கர்கள் அல்ல பனியாக்கள் என்று மறுப்பு செய்தி ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார்.
இது சம்பந்தமாக ஷோரூமை சேர்ந்தவர்கள் ஒரு புகாரை வேலூர் மாவட்ட போலீசாரிடம் வழங்கி இருந்தனர். அதன் அடிப்படையில் பாரிசாலன் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அவரை கைது செய்து வைத்திருப்பதாக தகவல் வெளி வருகிறது.
” அவரை ஷோரூமை சேதப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்து உள்ளதாக தகவல் கசிகிறது. ஆனால், பாரிசாலன் கைது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது “.
தனிப்பட்ட பிரச்சனைக்கு பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசிய பாரிசாலன் சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறார். இன்று கைது செய்யப்பட்டு இருப்பது மேலும் வைரல் ஆகும்.
இதுவும் இல்லுமினாட்டி சதியா என்று பாரிசாலன் வெளிவந்து லைவ் போடுவாரா..!
கிளிக் லைவ் வீடியோ : https://www.facebook.com/paari.saalan/videos/1739954106053204/
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.