20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை !

கடந்த இருபது வருடங்கள் கழித்து தமிழ்நாடு நெல் உற்பத்தியில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச நெல் உற்பத்தியாக 1.22 கோடி மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசின் புள்ளிவிவர அறிக்கை வெளியாகி உள்ளது.

2000-2001 ஆம் ஆண்டு தமிழகத்தின் நெல் உற்பத்தி விளைவிக்கப்பட்ட பரப்பு சுமார் 20,80,010 ஹெக்டேரில் எவ்வளவு மெட்ரிக் டென் நெல் உற்பத்தியானது என்றால், சுமார் 1,11,60,711 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு இடர்பாடுகள் இருந்தபோதிலும் குறிப்பாகக் காவிரி நதிநீர் பிரச்சனை, அத்துடன் வடகிழக்கு பருவமழை சரிவரப் பெய்யாமை, மேட்டூர் அணையிலிருந்து பாசன நீர் திறப்பு விவகாரம் போன்ற இடர்களையும் எல்லாம் தாங்கிக் கொண்டுதான் கடந்த பல  வருடங்களாகத் தமிழகத்தில் நெல் உற்பத்தியாளர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவ்வாறான துயர்களைக் கடந்து தான் இம்மாதிரி சாதனைகளை புரிந்துள்ளனர்.

உரியக் காலத்தில் நெல் விவசாயத்திற்குப் பாசன நீர் சரிவரத் திறக்கப்பட்டதால் நடப்பாண்டியில் 2021-2022 ஆண்டு நெல் சாகுபடியில் அதிக உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. அதன் பின்பு வரலாற்றிலே இல்லாத அளவிற்கு 2021-22ம் ஆண்டில் 22,05,470 ஹெக்டேர் பரப்பளவில் நெல் விளைவிக்கப்பட்டு சுமார் 1,22,22,46 மெட்ரிக் டன் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக தொழில்துறை வளர்ச்சி காரணமாக நெல் உற்பத்தி மற்றும் அதன் பரப்பளவு குறைந்து வருவதாக பொதுப்புத்தியில் குறைகூறும் நபர்களுக்குத் தமிழக அரசின் இப்புள்ளிவிவர அறிக்கை மறுப்பாக அமைந்துள்ளது.

Link : 

rice area and production in terms of paddy

Please complete the required fields.




Back to top button
loader