பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய IAF வீரர்.

பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலால் இரு நாட்டுக்கும் இடையே பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் ஊடுருவ முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Advertisement

இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்கப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து தப்பிய விமானிகள் அந்நாட்டில் சிக்கிக் கொண்டதாக ஒரு வீடியோவும், படங்களும் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் இருந்து சென்ற இரண்டு விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக  அந்நாட்டு ராணுவம் மற்றும் அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்திய ஊடகங்களிலும் இதுதொடர்பான செய்திகள் வெளியாகி உள்ளன.

Advertisement

இந்த தாக்குதலில் இந்திய IAF வீரர்கள் இரண்டு பேர் பாகிஸ்தான் ராணுவத்தால்  கைது செய்யப்பட்டுள்ளார்கள்  என பாகிஸ்தான் கூறியுள்ளது.

அவர்களில் ஒருவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில், முகத்தில் ரத்தம் ஒழுகும் நிலையில் பதில் அளிக்கும் வீடியோ காட்சிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் பதிவு செய்யபட்டுள்ளன. அதில், ” என்னுடைய பெயர் wings Commander அபிநந்தன்  மற்றும் என் சர்விஸ் எண் 27981 ” என வீடியோவில் பேசி இருப்பார். மேலும், ” நான் பறக்கும் விமானி மற்றும் என் மதம் ஹிந்து ” என தொடர்ச்சியாக பேசியதும் அதில் பதிவாகியுள்ளது. அதற்குமேல் அவர் பேச விரும்பவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.

அபிநந்தன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களில் முகம் முழுவதும் இரத்தம் ஒழுகுவது போன்று இருக்கும். அது, பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்கப்பட்டதால் ஏற்பட்டதா அல்லது விமானத்தில் இருந்து தப்பிக்கும் பொழுது ஏற்பட்டதா என தெரியவில்லை.

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் புகைப்படங்கள், அவர் வைத்து இருந்த வரைபடங்கள், ஆயுதம் மற்றும் ஆவணங்களை   வெளியிடப்பட்டுள்ளது.

அபிநந்தன் சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை மையத்தில் பயற்சி பெற்றவர், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என செய்திகளில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்திய தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. MiG21 விமானத்தை இழந்து விட்டோம், விமானி குறித்த எந்த தகவலும் இல்லை என இந்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யபட்டுள்ளார் என்ற செய்தி நாடு முழுவதும் அதிக வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்கஇந்திய வான்படை தாக்குதல் தொடர்பாகப் பரவும் வதந்திகள் !

Pakistan releases details of Indian pilots: Wing Commander Abhinandan’s video statement

Pakistan shot down two Indian jets inside its airspace, government claims, as border crisis escalates

Pakistan-India: Pakistan ‘shoots down two Indian jets’ over Kashmir

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button