தவறான வீடியோவை காஷ்மீரில் நிகழ்ந்ததாக பதிவிட்ட பாகிஸ்தான் அமைச்சர் !

காஷ்மீரில் மக்கள் மீதான அடக்குமுறை நிகழ்ந்து வருவதாக வெளியாகும் வீடியோ பதிவுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படுகின்றன. அவற்றில் உண்மை எது ? பொய் எது என அறியாமலும் வைரலாகும் வீடியோக்களும் உண்டு.

சமீபத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் மத்திய கடல்சார் விவகார அமைச்சரான அலி ஹைதர் சாய்தி உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீரில் மோடியின் அரசு என்ன செய்கிறது என்பதை உலகம் பார்க்க வேண்டும் என ஒரு வீடியோவை இணைத்து பதிவிடப்பட்டது. அதனுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ஐ டக் செய்து இருந்தார்.

Advertisement

Twitter link | Archived link

அந்த வீடியோவில், ” காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் லத்தியை கொண்டு மக்கள் கூட்டத்தை விரட்டி அடிப்பது போன்றும், மற்றொரு காட்சியில் பெண்கள் இருவர் காயத்துடன் விழுந்து கிடப்பதும் ” பதிவாகி இருக்கிறது. சுமார் 1.53 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோவை முன்பே பாகிஸ்தான் நாட்டின் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு உள்ளனர்.

Advertisement

ஆனால், இவ்விரு சம்பவங்களும் சமீபத்தில் நிகழ்ந்தவை அல்ல. ஆகையால், பாகிஸ்தான் அமைச்சர் பதிவிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.

வீடியோ 1 :

முதலில் இருக்கும் வீடியோவில் மக்களின் மீது தடியடி நடத்தும் காவலர்களின் உடையில் இருக்கும் அடையாளமானது காஷ்மீர் மாநில காவல்துறை உடையது அல்ல. அது ஹரியானா மாநில காவல்துறை உடையில் இருப்பது என தேடலில் அறிந்து கொள்ள முடிந்தது.

அடுத்ததாக, இதே வீடியோ காட்சிகளில் உள்ள பகுதிகள் 2017-ல் ஆகஸ்ட் மாதம் யூட்யூப்-ல் Gurmeet Ram Rahim Singh Verdict: Reactions என்ற தலைப்பில் வெளியான வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது. 2017 ஆகஸ்ட் மாதம் சாமியார் குர்மித் ராம் ரகிமை பாலியல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நேரத்தில் வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.

வீடியோ 2 :

மற்றொரு வீடியோவில், இரத்த காயங்களுடன் பெண் ஒருவர் குழந்தையை வைத்துக் கொண்டு அழும் காட்சிகள் இதற்கு முன்பாவே வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குளிர்பானத்தில் விஷம் கலந்ததாக பரவிய வதந்தி உடன் பகிரப்பட்ட புகைப்படங்கள்.

மேலும் படிக்க : குளிர்பானத்தில் விஷம் கலந்ததாக வைரலாகும் ஃபார்வர்டு செய்தி உண்மையா ?

ஆகஸ்ட் 31, 2018-ல் டைம்ஸ் நவ் பத்திரிகையில் வெளியான செய்தியில், தெலங்காவின் உதவி ஆய்வாளர் ஒருவர் பிற பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டறிந்து அதற்கு எதிராக பேசிய தன் மனைவி மற்றும் மனைவியின் தாயை தாக்கியதாக ” குறிப்பிட்டு இருந்தனர்.

முடிவு :

இப்படி வெவ்வேறு சம்பவங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒன்றிணைத்து காஷ்மீர் மக்கள் மீது நடக்கும் தாக்குதல் என பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் பரவியதை பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர் தன் ட்விட்டரில் பதிவிட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-க்கும் டக் செய்து உள்ளார்.

Proof : 

Gurmeet Ram Rahim Singh Verdict: Reactions

Caught on cam: Telangana Sub-Inspector beats wife, baby, mother-in-law

https://web.archive.org/web/20190821090807

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close