இந்து சாதுக்கள் கொலை சம்பவம்.. முஸ்லீம் போய் கம்யூனிசம் சாயம் பூச முயற்சி.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஊரடங்கு காலத்தில் இரு சாதுக்கள் மற்றும் ஓட்டுநர் ஊர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு சாதுக்கள் கும்பலால் தாக்கப்படும் வீடியோவை காவல்துறையை காப்பாற்றச் சென்ற காவி முஸ்லீம்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் என தமிழில் வதந்தியைப் பரப்பி வந்தார்கள்.

Advertisement

மேலும் படிக்க : இந்து சாமியார் முஸ்லீம்களால் அடித்து கொலையா ?| உண்மை என்ன ?

ஆனால், அக்கிராமப் பகுதியில் குழந்தை கடத்தல், கொள்ளையர்கள் உலாவி வருவதாக பரவிய வாட்ஸ் அப் வதந்திகளால் காரில் சென்ற சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் மற்றும் அம்மாவட்ட காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய 110 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில் 9 பேர் 18 வயது நிரம்பாதவர்கள் என வெளியாகியது.

எனினும், அப்பாவி சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கட்சியைச்  சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத சாயம் பூச முயன்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்ட 101 பேரின் விவரத்தை அளித்துள்ளார். அதில், ஒருவர் கூட முஸ்லீம் இல்லை என்றும், இந்த சம்பவத்தை மதம் சார்ந்ததாக மாற்ற வேண்டாம் என மீண்டும் கூறுவதாக வெளியாகி இருக்கிறது.

முஸ்லீம் சாயம் பூச முடியவில்லை என்றால் என்ன இருக்கவே இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள், கிறிஸ்தவர்கள்.. ஆம், சாதுக்கள் கொலை மத மாற்ற கும்பலால், கம்யூனிஸ்ட்டுகளால் திட்டமிட்டு செய்ததாக பரப்பத் துவங்கி உள்ளனர்.

Twitter link | archive link 

பாஜகவின் தேசியச் செயலாளர் சுனில் தேயோதர் சம்பவத்தை கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்புப்படுத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். சம்பவம் நடந்த இடம் கம்யூனிஸ்ட்டு கோட்டை என்றும், மார்க்சிஸ்ட் குண்டர்களால் தாக்கப்பட்டதாக மகாராஷ்டிரா அரசையும் விமர்சித்து இருந்தார்.

மகாராஷ்டிராவில் சாதுக்களுக்கு நேர்ந்தது கண்டிக்கத்தக்கது. அச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வதந்தியால் ஒரு உயிர் கூட போகக்கூடாது என தொடர்ந்து பேசி வருகிறோம், கட்டுரை வெளியிட்டு வருகிறோம். ஆனாலும், வதந்திகளின் பரவல் குறைந்தபாடில்லை. அதனால் உயிரிழப்புகளும் தொடர்கின்றன.

ஒரு வதந்தியால் பறிக்கப்பட்ட உயிரை வைத்து மேன்மேலும் வதந்திகள் பரப்புவது இழிவான செயல். இந்திய அளவில் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை மக்கள் உணர வேண்டும்..

Proof links : 

Palghar lynching: Maharashtra Minister makes public list of 101 arrested

None of 101 people arrested in Palghar case is a Muslim: Maharashtra home minister

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button