This article is from Mar 31, 2021

இன்று ஆதாருடன் இணைக்கா விட்டால், பான் கார்டு முடக்கப்படும் அபாயம் !

2021 மார்ச் 31ஆம் தேதி பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள். அவ்வாறு இணைக்கவில்லை என்றால் வருமான வரித்துறையினரால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரி சட்டத்தில் 139AA மற்றும் 139AA (2) எனும் இரு புதிய பிரிவுகள் 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டு முறையே சேர்க்கப்பட்டது. அதன்படி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதும், பான் கார்டு பெறவெண்டுமென்றால் விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டது. அவ்வாறு இணைக்க தவறினால் பான் கார்டு முடக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது section 234H எனும் ஒரு புதிய பிரிவு வருமான வரி சட்டம், 1961ல் இணைக்கப்பட்டது. இதன்படி, ஒருவர் பான் கார்டை ஆதாருடன் மார்ச் 31க்குள் இணைக்கவில்லை என்றால் அவருக்கு 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், வரி கட்டவும், பெறவும் என பான் கார்டின் தேவையானது வரி கட்டுவோருக்கு இன்றியமையாதது. அவ்வாறு வரி கட்டும் போது “செயலிழக்கப்பட்ட பான் கார்டு வைத்திருக்கும் குற்றத்திற்காக வருமான வரி சட்டம் 272 B பிரிவின்படி ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்” என Taxbuddy.com-ன் நிறுவனர் சுஜித் பங்கர் ‘பிஸ்னஸ் லைன்‘ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

PAN கார்டை ஆதாருடன் இணைக்க :

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html

இதில் PAN கார்டு எண், ஆதார் எண், பெயர் போன்ற விவரங்கள் கேட்கப்படும். பான் கார்டு பயன்பாட்டாளர்கள் விரிவாக ஆதார் எண்ணை இணைக்கவும்.

  • அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி) 
Please complete the required fields.




Back to top button
loader