வைரலாகும் 2012ல் பெட்ரோல் விலை உயர்விற்கு பிரபலங்கள் பதிவிட்ட ட்வீட்கள் !

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கு எதிராக மக்கள் தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் சமூக வலைதளங்களின் மூலமாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2010-2012 ஆம் ஆண்டுகளில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய பிரபலங்கள், தற்போதைய ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் பதிவிட்ட ட்வீட்களை நெட்டிசன்கள் வைரல் செய்து வருகிறார்கள். பாலிவுட் நடிகர் அக்சய் குமார், அமிதாப்பச்சன் போன்ற பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டது தொடர்பான சிறு தொகுப்பை காணலாம்.
மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டு உள்ள நிலையில் ட்விட்டர் பயனாளர் ஒருவர் அமிதாப் பச்சன் 2012-ல் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பதிவிட்ட ட்வீட் உடன் இன்று விலை ரூ.100 தொட்டு உள்ள புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு ஏதேனும் கருத்து கூறுமாறு கூறியுள்ளார்.
நடிகர் அக்சய் குமார் 2012-ல் பெட்ரோல் விலை உணர்வை சுட்டி பகடியாக, இது நாம் அனைவரும் மிதிவண்டியை சுத்தம் மற்றும் சரி செய்து பயணிக்க வேண்டிய தருணம் என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், பின்னர் அதை நீக்கினார்.
மேலும், 2010-ல் நடிகர் சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் நான் மாட்டு சாணத்தின் புகைப்படத்தை அனுப்பி உள்ளேன், அதை வைத்து இயற்கை எரிவாயு தயாரித்துக் கொள்ளலாம் என்று பகடி செய்தும் இருந்தார்.
Don't worry abt petrol , sending u a pic of gobar all u hv to do vit it is make gas. N v hv gobargas http://twitpic.com/1no7hh
— Salman Khan (@BeingSalmanKhan) May 14, 2010
மேலும், பாலிவுட் நடிகர் அனுபம் க்ஹெர் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பெட்ரோல் விலை உயர்வுகாக பதிவு செய்த ட்வீட்களை கீழே காணலாம்.
Asked my driver,"Why r u late?""Sir. Came by Cycle.""What happened to motorcycle."His reply,"Sir, it is kept at home now as a showpiece.":)
— Anupam Kher (@AnupamPKher) October 14, 2012
Petrol price hiked yet again. Aam Aadmi ki UPA sarkar now only works for khaas tel companies!!
— Smriti Z Irani (@smritiirani) November 3, 2011
தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் 2012-ல் குஜராத் முதல்வராக இருந்த போது பெட்ரோல் விலை உயர்வு குஜராத்தை பெரிதும் பாதிப்பதாக பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
For the UPA, GDP growth does not mean Gross Domestic Product but it stand for Gas, Diesel and Petrol price… http://t.co/4kqEHS6c
— BJP (@BJP4India) December 14, 2012
2012-ல் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், UPA அரசிற்கு ஜிடிபி என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி இல்லை என்றும் கேஸ் டீசல் பெட்ரோல் என விமர்சித்து பதிவிட்டு இருந்தனர். பின்னாளில், இதே வாக்கியத்தை பாஜக அரசில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வரும் போதெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2012-ல் கச்சா எண்ணெயின் விலை தோராயமாக 54 டாலராகவும், பெட்ரோல் விலை 67 ரூபாயாகவும் இருந்திருக்கிறது. இதன் பின், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்தது. இன்று கச்சா எண்ணெயின் விலை தோராயமாக 63 டாலராகவும், பெட்ரோல் விலை 91 முதல் 100 ரூபாயாகவும் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் குறைந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், வரியை அதிகப்படுத்தி வருகிறார்கள்.
கடந்த ஆட்சி காலத்தில் யார் யார் எல்லாம் பெட்ரோல் உயர்வை விமர்சித்து பதிவிட்டார்களோ அவர்கள் எல்லாம் இன்று அதை கண்டுகொள்ளாத நிலையில் அவர்கள் அன்று பதிவிட்ட பதிவை வைத்து இன்று மக்கள் சமூக வலைத்தளங்களில் பகடி செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.