This article is from Feb 18, 2021

“பெட்ரோல், டீசல் பாட்னர்ஷிப் அபாரம்” கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி ட்வீட் வைரல் !

நாடு முழுவதிலும் பெட்ரோல், டீசல் உயர்விற்கு கடும் எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்து வருகிறது. குறிப்பாக, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிரிக்கெட்டில் செஞ்சுரி அடிப்பதுடன் ஒற்றுமைப்படுத்தி கிண்டலாக ட்வீட் செய்து உள்ளார் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி.

Tweet link | Archive link 

” பெட்ரோல் பிரமாதமான இன்னிங்ஸை விளையாடி இருக்கிறது. இந்த கடினமான சூழ்நிலையில் கூட நன்கு விளாசப்பட்ட சதம் இது. முதல் பந்தில் இருந்தே பெரிய இன்னிங்ஸை தொடும் என எதிர்ப்பார்தோம். டீசலும் சமமாக ஆதரிக்கிறது. இருவரின் பாட்னர்ஷிப் அபாரம். சாமானிய மக்களுக்கு எதிராக விளையாடுவது எளிதானது அல்ல. ஆனால் நீங்கள் இருவரும் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறீர்கள் ” என மனோஜ் திவாரி பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க : வைரலாகும் 2012ல் பெட்ரோல் விலை உயர்விற்கு பிரபலங்கள் பதிவிட்ட ட்வீட்கள் !

பெட்ரோல், டீசல் விலையை கிரிக்கெட் உடன் தொடர்புப்படுத்தி இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி பதிவிட்ட நக்கல் பதிவு 50 ஆயிரம் லைக்குகளை நெருங்கி வருகிறது. அவரின் ட்வீட் இந்திய அளவில் வைரலாகி பல மொழிகளில் ஊடகச் செய்திகளிலும் இடம் பிடித்து உள்ளது.

Please complete the required fields.




Back to top button
loader