பிரதமர் பெற்ற விருது , விருதுதானா ?

பிரதமர் மோடி அவர்களுக்கு பிலிப் கோட்லெர் விருது ஜனவரி 14-இல் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ராகுல் காந்தி , மிக பிரபலமான விருது மோடிக்கு கிடைத்தற்கு வாழ்த்து தெரிவித்து இதற்கு ஜூரி யாரும் இல்லை இது வரை யாருக்கும் கொடுத்தது இல்லை இந்த விருது பின்னணியில் அனைவருக்கும் தெரியாத நிறுவனம் உள்ளது என கிண்டலாக ட்வீட் செய்து இருந்தார்.
நவீன பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படும் கோட்லெர் பிரபலமான பொருளாதார எழுத்தாளர். இவர் அமெரிக்காவில் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கோட்லெர் வேர்ல்ட் மார்க்கெட்டிங் சமிட்டின் ஒரு நிறுவனர். இவரது பெயரில் ஆண்டு தோறும் அளிக்கப்படும் பொருளாதார வல்லுநர் விருதுக்கு பரிந்துரைக்க விண்ணப்பதாரர்களிடம் இருந்து 1 லட்சம் வரை வசூலிக்கப்படும்.

காணொளி கீழே:

2017-இல் தொடங்கப்பட்ட சுசலன்ஸ் ஆராய்ச்சி தனியார் நிறுவனத்துடன் 3 ஆண்டுகள் இந்தியாவில் இயங்க கோட்லெர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.அதன் படி பிலிப் கோட்லர் பெயரில் இந்நிறுவனம் விருது வழங்கலாம்.
இவ்விருது குறித்து சலசலப்பு ஏற்பட்டதும் இவ்விருதை ஜூரி நபர்கள் யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. பிலிப் கோட்லர் தேர்ந்தெடுத்தார். தலைவர்களுக்கு இதுவரை இந்த விருது அளிக்கப்படவில்லை . பிரதமர் மோடிக்கு முதன் முதலில் அளிக்கப்பட்டது இனி ஆண்டு தோறும் இது தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தியா டுடே பத்திரிகை சார்பாக பதிவு செய்யப்பட்ட சுசால்னஸ் நிறுவன முகவரிக்கு சென்று பார்த்த போது யாரும் அந்த நிறுவனம் அமைந்துள்ள இடம் பற்றி சொல்ல முன்வரவில்லை. தவறான தொலைபேசி எண் மற்றும் அவர்களின் இணையதளமும் செயல்படவில்லை. ( Suslence Website)

இதை தொடர்ந்து பிலிப் கோட்லெர் அவரது ட்விட்டர் பதிவில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் விருது அளிக்க வர முடியாததற்காக வருந்தி மோடிக்கு ஏன் விருது வழங்கப்பட்டது என காரணங்களையும் சொல்கிறார். அரசாங்கம் மற்றும் சமூக நீதியின் பிரதிநிதியாகவும் ஒரு நல்ல சமுதாயம் ஆரோக்கியமான வியாபாரத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது . இலாபம், மக்கள் மற்றும் உலகம் (PROFIT, PEOPLE AND PLANET) ஆகிய மூன்று அடித்தளத்தை நடைமுறைப்படுத்த வணிகங்களை ஊக்குவிக்கிறது.பொது நலனுக்காக உண்மையாகவும், முழு இருதயத்தோடும் வேலை நடக்கும் என தெரிவித்துள்ளார்.

PMO Press Release

Rahul Gandhi tweet

world marketing summit group website

Philip kotler tweet

 

Please complete the required fields.
Back to top button