பிரானா மீன்கள் மூலம் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சிறுவன்|எங்கு நிகழ்ந்தது ?

னிதர்களை வேட்டையாடும் பிரானா மீன்களை மையமாக் கொண்டு கதைக்களம் அமைந்து இருக்கும் ஹாலிவுட் திரைப்படங்களில் நிகழ்வது போன்று நிஜத்தில் நடக்கிறது. மனிதர்களை தங்களின் கூறிய பற்களால் உண்ணும் பிரானா மீன்கள் உண்மையில் இருக்கின்றன என்பது குறித்த கேள்விகள் எழுவதுண்டு.

இந்நிலையில், ஒரு சிறுவனை பிரானா மீன்கள் தங்களின் இரையாக்கி வெறும் எலும்புக்கூட்டை மட்டுமே மிச்சம் வைத்ததாக புதைப்படம் ஒன்று பகிரப்பட்டு இருந்தது. அந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்தும் நம்மிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

Advertisement

சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில், அப்படங்களை போன்றே பல இணைய பக்கங்களில் வெளியான புகைப்படங்களை காண முடிந்தது. அதில், ஒன்றாக Daily motion என்ற இணையதளத்தில் ” பிரானா மீனால் இரையாக்கப்பட்ட 11 வயது சிறுவன் ” என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

வீடியோவில், ” சிறுவனின் உடலில் சதைகள் இல்லாமல் எலும்புகள் மட்டுமே மிஞ்சி இருக்கும் நிலையில் காண்பிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன ” . எனினும், இந்த சம்பவம் தற்பொழுது நிகழ்ந்தவை அல்ல. எந்த நாட்டில், எப்பொழுது நிகழ்ந்தது என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து பார்த்தோம்.

Advertisement

2015-ல் பெரு நாட்டில் 11 வயது சிறுவன் தனது பாட்டியுடன் விடுமுறைக்காக சுற்றுலா சென்ற இடத்தில் சிறுவர்களுடன் விளையாடும் பொழுது தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். அப்பொழுது, பிரானா மீன்களுக்கு இரையாகி இறந்ததாக சில இணைய பக்கங்களில் மட்டும் கூறப்பட்டு இருக்கிறது.

பிரானா மீன்களால் இறப்புகள் ஏற்படும் பொழுது அதனை பற்றிய செய்திகள் உலகளவில் கவனம் பெரும். ஆனால், பெரு நாட்டில் 11 வயது சிறுவன் இறந்ததாக கூறும் செய்தியானது உலகளவில் முதன்மை ஊடகங்களில் வெளியாகவிலை. மேலும், இந்த சம்பவம் குறித்த விரிவான மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களும் எங்கும் அளிக்கப்படவில்லை.

செய்தியில் வந்த பிற சம்பவங்கள் :

2015 ஜனவரி 27-ம் தேதி பிரேசில் நாட்டில் உள்ள மொண்டே அலெஃரே நகருக்கு அருகே இருக்கும் Maicuru ஆற்றில் 6 வயது பெண் குழந்தை தனது பாட்டி மற்றும் பிற குழந்தைகளுடன் படகில் செல்லும் பொழுது புயலில் படகு கவிழ்ந்தது. அதில், 6 வயது குழந்தை மட்டும் ஆற்றில் பிரானா மீன்களிடம் சிக்கி உள்ளார்.

அங்குள்ள மக்களின் உதவியுடன் குழந்தை இறந்த உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. பிரானா மீன்கள் குழந்தையின் பாதி உடலை இரையாக்கி இருந்தன. இதே போன்று, 2012-ல் பிரேசிலில் உள்ள Curua என்ற நகரத்திற்கு அருகே பிரானா மீன்களால் 5 வயது குழந்தை இறந்துள்ளதாக என பிபிசி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2011-ல் பொலிவியாவில் குடி போதையில் ஆற்றில் குதித்த 18 வயது இளைஞரை பிரானா மீன்கள் தாக்கியதால் இறந்துள்ளார். 2013 அர்ஜென்டினாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நீச்சல் அடித்துக் கொண்டிருந்த 70 பேரை பிரானா மீன்கள் தாக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

பிரானா மீன்கள் இருப்பதும், அதனால் மனிதர்கள் இறப்பதும் உண்மை சம்பவங்களே. பிரேசில், அர்ஜெண்டினா உள்ளிட்ட பல நாடுகளில் பிரானா மீன்கள் ஆறுகளில் வாழ்ந்து வருகின்றன.

Proof :

Brazilian girl, 6, ‘eaten’ by piranhas and found dead

Piranhas Kill 6-Year-Old Girl by Eating Her Legs

Drunk man dies after being attacked by piranhas in Bolivia

11-year-old boy died after being eaten by piranhas in Peru

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close