பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் வெனிலா சுவை தயாரிக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை முறையாக மறுசுழற்சி செய்ய முடியாததால் அவை சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. பிளாஸ்டிக்கின் பயன்பாடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அதன் பல்துறை பயன்பாட்டை தடுக்க முடியவில்லை. பெருங்கடல்களில் உள்ள கழிவுகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு அடுத்து அதிகப்படியாக இருப்பது ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டிகளே.
பிளாஸ்டிக்குகள் ஒரு முறைப் பயன்படுத்திய பின்பு அவற்றின் 95% உருகுளைந்து விடுகின்றன. எனவே இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக வேறு விதமான பயன்பாட்டிற்கு அவற்றை உபயோகிப்பதில் ஆராய்ச்சியாளர்களும், ஆய்வாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் விளைவாக தற்போது பிளாஸ்டிக்கின் மூலப் பொருளான டெரெப்தாலிக் அமிலம் (TA) வில் இருந்து மரபணு மாற்றப்பட்ட எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் பாக்டீரியா மூலமாக வெனில்லின்னை எடுத்துள்ளனர். இந்த வெனில்லின் தான் வெனிலா சுவையின் முக்கிய கூறு.
முன்கதை :
பாலி எத்திலீன் டெரெப்தாலேட் (PET) எனப்படும் பொருளில் இருந்து தான் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் பிளாஸ்டிக் உண்ணும் பாக்டீரியா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற இது முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்பட்டு உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த பாக்டீரியாவவில் இருந்து ஒரு புது என்சைம் (enzyme) கண்டுபிடிக்கப்பட்டது. இது 2016 இல் ஜப்பான் கண்டுபிடித்த அந்த பாக்டீரியாவை விட இது 6 மடங்கு வேகமாக பிளாஸ்டிக்கை உண்ணக்கூடியதாக இருந்தது. இது போன்ற மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியாக்களை சூப்பர் என்சைம் (super enzymes) என குறிப்பிடப்படுகிறது.
2018ல் PET-வில் இருந்து அதன் அடிப்படை அலகுவான டெரெப்தாலிக் அமிலம்(TA)-யை பிரித்தெடுத்த அதே சூப்பர் என்சைம் தான் தற்போது TA-வை வெனில்லினாக மாற்றியுள்ளது. தற்போது TA விலிருந்து வெனில்லினுக்கு 79% மாற்றம் அடையப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கிரீன் கெமிஸ்ட்ரி” வெளியிட்ட இந்த இந்த ஆராய்ச்சிக்கு பி.பி.எஸ்.ஆர்.சி டிஸ்கவரி பெல்லோஷிப் மற்றும் யு.கே.ஆர்.ஐ பியூச்சர் லீடர் பெல்லோஷிப் நிதியளித்து உள்ளன.
உணவு மற்றும் அழகுசாதனத் தொழில்களில் களைக்கொல்லிகள், மற்றும் துப்புரவுப் பொருட்கள் என பல துறைகளில் வெனில்லின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2018 இல் இவற்றின் உலகளாவிய தேவை 37,000 டன்களுக்கு அதிகமாக இருந்தது.
பொதுவாக வெனிலா, வெனிலா பீன்ஸில் இருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் அவற்றின் அதிக தேவை மற்றும் வெனிலா பீன்ஸின் பற்றாக்குறை காரணமாக செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது. தற்போது உலகின் 85% வெனிலா தேவையை புதைபடிவ எரிபொருட்களிலிருந்து (Fossil fuel) தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வெனிலாவை எடுக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் “upcycling” எனும் வார்த்தை உள்ளது. இது மறுசுழற்சிக்கு எதிர் வார்த்தையாகும். ஒரு பொருளின் முன்பு இருந்த பயன்பாட்டை விட தரம் மிகுந்த பயன்மிக்க ஒரு பொருளை உருவாக்குவது upcycling எனப்படும். மறுசுழற்சி முறையில் ஒரு பொருளை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்த முதலில் அதன் மூலக்கூறு அமைப்பை உடைக்க வேண்டும். ஆனால் PET போன்று ஒரு முறை உபயோகித்த பிறகு 95% மூலக்கூறு அமைப்பு சிதைத்துவிடும் பொருளை மறுசுழற்சி செய்வதை விட upcycling முறையில் பயன்படுத்துவதே சிறந்ததாக கருதப்படுகிறது.
” பிளாஸ்டிக் கழிவுகளை மதிப்புமிக்க தொழில்துறை இரசாயனமாக மாற்றுவதற்கு ஒரு உயிரியல் முறையைப் பயன்படுத்துவதற்கான முதல் எடுத்துக்காட்டு இது தான். இந்த கண்டுபிடிப்பு வட்ட பொருளாதாரத்திற்கு (circle economy) மிகவும் உற்சாகமான தாக்கங்களை ஏற்படுத்தப்போகிறது.” என எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியலாளர் ஆய்வு ஆசிரியர் ஜோனா சாட்லர் தெரிவித்துள்ளார்.
Links :
plastic-waste-can-be-transformed-vanilla-flavoring-study-shows
bacteria-serves-tasty-solution-to-plastic-crisis
https://pubs.rsc.org/en/content/articlelanding/2021/GC/d1gc00931a#!divAbstract
scientists-convert-used-plastic-bottles-into-vanilla-flavouring
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.