“பிஎம் கேர்ஸ்” நிவாரண நிதி ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் வராது – பிஎம்ஓ தகவல்.

கோவிட்-19 இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய சமயத்தில் ஆளும் பாஜக அரசு “ பிஎம் கேர்ஸ் ” எனும் பிரதமர் நிவாரண நிதி அமைப்பினை உருவாக்கி தனிநபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்றது. ஏற்கனவே பிரதமர் தேசிய நிவாரண நிதி அமைப்பு (PMNRF) இருக்கும் போது புதிதாக பிரதமர் கேர்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன.

Advertisement

இந்நிலையில், ” பிஎம் கேர்ஸ் ” நிதி தொடர்பாக கேட்கப்பட்ட ஆர்.டி.ஐ தகவலில் பிஎம் கேர் பொது அதிகாரம் அல்ல மற்றும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்ப முடியாது என பிரதமர் அலுவலகம் பதில் அளித்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதேபோல் ஆர்டிஐ தாக்கல் செய்தவர்களுக்கும் அதே பதில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதம் பெங்களூரை சேர்ந்த சட்டம் பயிலும் மாணவர் ஹர்ஷா கண்டுகுரி என்பவர் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையின் உருவாக்கம், சேர்ந்துள்ள தொகை, செலவு செய்த விவரங்கள் உள்ளிட்ட கேள்விகளை கேட்டு விண்ணப்பம் தாக்கல் செய்தார். அந்த ஆர்.டி.ஐ கேள்விக்கு மே 29-ம் தேதி பிரதமர் அலுவலகம், ” தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் பிரிவு 2(எச்) கீழ் பிஎம் கேன்ஸ் நிதி ஒரு பொது அதிகாரம் அல்ல.. இருப்பினும், இந்த நிதியைப் பற்றிய தகவல்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் ” எனக் கூறியதாக Live Law இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

” பிரதமர் அலுவலகம் கூறியது போன்று பிஎம் கேர்ஸ் இணையதளத்தில் அவ்வாறான தகவல்கள் ஏதும் தெளிவாக இல்லை மற்றும் பிஎம் கேர்ஸ் நிதிகள் சிஏஜி (comptroller and auditor general of india ) மூலம் தணிக்கைக்கு உட்படுத்த முடியுமா என்பதும் தெளிவாக இல்லை என Live Law தெரிவித்து உள்ளது ”

பிஎம் கேர்ஸ் நிவாரண நிதி தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 6,500 கோடி பெற்றது. பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதிகளை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற நிதியை தளர்த்தி மற்றும் அயல்நாட்டில் இருந்து வரும் நிதியையும் பெறுவதற்கான விதிவிலக்கையும் பிஎம் கேர்ஸ் பெற்றுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் படி பொது அதிகாரம் என்பது அரசியலமைப்பின் கீழ் அல்லது பாராளுமன்றத்தால் செய்யப்பட்ட வேறு எந்த சட்டத்தினாலும் அல்லது அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு அல்லது உத்தரவின் மூலம் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த வரையறை ஆனது அரசாங்கம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் கணிசமாக நிதியளிக்கப்பட்ட நிறுவனங்களையும் உள்ளடக்கியது.

முன்பாக, சிஏஜி அலுவலகம் NDTV-க்கு அளித்த தகவலில், இந்த பிஎம் கேர்ஸ் நிதி ” ஒரு தொண்டு நிறுவனம் ” மற்றும் ” தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் நன்கொடைகளின் அடிப்படையில் ” என்பதால் சிஏஜி தணிக்கை செய்யாது. முன்பு இருந்த பிஎம்என்ஆர்எஃப் கூட சிஏஜி ஆல் தணிக்கை செய்யப்படவில்லை, ஆனால் அரசு சாராத தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

Links : 

PM CARES Fund Not A ‘Public Authority’ Under RTI Act, Says Prime Minister’s Office

Coronavirus | PM CARES is not a public authority under RTI Act: PMO

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button