பெட்ரோல் விலை ரூ100… பிரதமர் மோடி சொல்லும் காரணம் !

கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது முதலே இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தினை தொட்டு இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.100ஐத் தொட்டது அரசின் மீதான கேள்வியை அதிகரித்து உள்ளது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

Advertisement

இந்நிலையில், நாட்டின் எரிசக்தி தேவைக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைக்க முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் ராமநாதபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் சென்னை மணலியில் எரிவாயு உற்பத்தி மையம் ஆகியவற்றை காணொலி மூலம் திறந்து வைத்தார், நாகையில் அமையவிருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ” 2019-20ல் இந்தியா 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவிற்கு எண்ணெயையும், 53 சதவீதத்திற்கு மேல் எரிவாயுவையும் இறக்குமதி செய்து பூர்த்தி செய்து வருகிறது. பன்முகத் தன்மையும், அறிவாற்றலும் கொண்ட நம் நாடு எரிசக்தித் தேவைக்காக இறக்குமதியை சார்ந்து இருக்கலாமா ?. நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை, எனினும் இதுபோன்ற திட்டங்கள் பற்றி நாம் நீண்ட காலத்திற்கு முன்பாகவே கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

எரிசக்தி தேவைக்காக வெளிநாடுகளை சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டும். தூய்மையான மற்றும் பசுமையான எரிசக்தி ஆதாரங்கள் நோக்கி செயல்படுவதற்கு கூட்டாக சில பணிகளை மேற்கொள்ள வேண்டியது கடமையாகும். எங்கள் அரசாங்கம் நடுத்தர வர்க்கத்தின் கவலையை உணர்கிறது. ஆகையால், இப்போது விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் உதவக்கூடிய வகையில் எத்தனால் மீதான கவனத்தை இந்தியா அதிகரித்து வருகிறது.

இறக்குமதியில் தேவையைக் குறைக்க கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் பெட்ரோலில் சேர்க்கப்படுகிறது. தற்போது, பெட்ரோலில் சேர்க்கப்படும் 8.5% எத்தனால் விகிதம் 2025-க்குள் 20% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

புதுப்பிக்கத்தக்க மூலங்களில் இருந்து பெறப்படும் ஆற்றலின் பங்கை இந்தியா அதிகரித்து வருகிறது. 2030-ல் மொத்த ஆற்றலில் 40% பசுமை எரிசத்தி மூலங்களில் இருந்து உருவாக்கப்படும். 2019-20ம் ஆண்டில் உலகில்(எண்ணெய்) சுத்திகரிப்பு திறன் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் இருந்தோம். சுமார் 65.2 மில்லியன் டன் பெட்ரோலிய உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இது மேலும் உயரும்.

எரிசக்தியில் தற்போது 6.3 சதவீதமாக இருக்கும் இயற்கை எரிசக்தியை 15 சதவீத உயர்த்தவும், அதை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரவும் உள்ளோம் ” எனப் பேசி உள்ளார்.

மேலும் படிக்க : எதற்காக எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை.. விற்பனையாளர்களின் எச்சரிக்கை என்ன ?

இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி வெளிநாடுகளில் சார்ந்து இருப்பதை குறைப்பதில் முன்பே கவனம் செலுத்தி இருந்தால் நடுத்தர வர்க்கத்திற்கு சுமை இருந்திருக்காது என முந்தைய அரசு(மத்தியில் காங்கிரஸ்) இறக்குமதியை குறைக்கவில்லை என்றும், மாற்று திட்டங்களை கொண்டு வரவில்லை என சாடி இருக்கிறார்.

மேலும் படிக்க : வைரலாகும் 2014-2020 வரையிலான பெட்ரோல், டீசல் விலை பட்டியல் !

எரிவாயு இறக்குமதியை குறைப்பதிலும், மாற்று ஆற்றலை நோக்கி பயணிக்க வேண்டும் எனக் கூறும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் வரியை உயர்த்தி சரி செய்தனர், சில மாதங்களாக கேஸ் மானியத்தை குறைத்து உள்ளனர்.

தற்போது பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் மத்திய, மாநில அரசுகளின் வரிகளே அதிகம். பெட்ரோலில் 60% மற்றும் டீசலில் 54%-க்கும் அதிகமாக வரிகள் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Links : 

Petrol at ₹100 | PM Modi blames previous governments for not cutting import dependence

Narendra Modi, Hon’ble PM of India Launching Developmental Projects in Oil and Gas Sector in TN

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button