கேமராவை மறைத்த விநாயகர் சிலை, நகர்த்த சொன்ன பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ !

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி மேடையில் கேமராவை மறைக்கிறது என்பதால் சாமி சிலையை அவமதித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Modi insulted Hindu god ganesh, asked party member to remove idol from Camera in disrespect behaviour
They use our god only for votes , so this time they need bajrangbali till election only pic.twitter.com/fL05WhLYi3
— Manjeet Singh Ghoshi (@ghoshi_manjeet) May 3, 2023
கேமரா மறைக்குதுடா ஏ வென்று pic.twitter.com/mbrPCCpNFW
— அதிபன் (@athipann) May 4, 2023
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 30 ஆம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். அதில் 6 பேரணிகள், 2 சாலை அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மே 3 ஆம் தேதி உத்தர கன்னடா மாவட்டம், அங்கோலா நகராட்சி மன்றத்தில் நடைப்பெற்ற பேரணியில் பிரதமர் மோடி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உத்தர கன்னடா கலாச்சாரத்தின் படி தலைப்பாகை அணிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சால்வை மற்றும் விநாயகர் சிலை பரிசளிக்க கட்சியினர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அந்த வரிசையில் கேமராவை மறைத்துக் கொண்டு ஒருவர் பிரதமர் மோடிக்கு முன்பாக விநாயகர் சிலை கொடுக்க நிற்கிறார். அந்த நபர் சிலையுடன் கேமரா முன்நின்று பிரதமரை மறைத்துக் கொண்டிருக்கும் போது அந்த நபரை வழிவிட்டு நிற்கும்படி கூறுகிறார். அவருக்கு அருகே இருக்கும் நிர்வாகியும் கையை காட்டி நகர்ந்து செல்லும்படி கூறுகிறார். பின்னர், பிரதமர் மோடி அங்குள்ள மக்கள் மற்றும் கேமராவை நோக்கி வணக்கம் வைக்கிறார்.
அதன் பிறகு, வரிசையில் நின்ற நபர் குனிந்து கொண்டு பிரதமர் முகத்தை மறைக்காதவாறு சிலையை வழங்குகிறார். இந்த காட்சிகள் நியூஸ் 18 கன்னடா சேனலின் நேரலையில் பதிவாகி இருக்கின்றன.
மேலும் படிக்க : நெற்றியில் உள்ள குங்குமத்தை கார்கே துடைத்தால் இந்துமத வெறுப்பு.. இதையே அமித்ஷா, பாஜக முதல்வர்கள் செய்தால் ?
இதற்கு முன்பாக, கர்நாடகா தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து விட்டு பேசியதாக ஓர் வீடியோவை பாஜகவினர் வைரல் செய்தனர். ஆனால், இதுபோல் பாஜகவின் அமித்ஷா முதல் அக்கட்சியின் முதல்வர்களும் செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : கேமராவை மறைக்காம பின்னாடி நகருங்க.. வைரலாகும் பிரதமர் மோடியின் வீடியோ !
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கப்படும் போது அவரை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் அலாதி ஆர்வம் கொண்டவர். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கேமரா முன்பாக யாராவது வந்தாலோ அல்லது அவரை மறைத்தாலோ அவர்களை விலக வைத்த பிறகு அங்கிருந்து செல்வார். இதுதொடர்பாக, பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.
link :
LIVE: PM Modi Rally In Ankola | BJP Election Campaign | Karnataka Elections 2023 | News18 Kannada