கேமராவை மறைக்காம பின்னாடி நகருங்க.. வைரலாகும் பிரதமர் மோடியின் வீடியோ !

பிரதமர் நரேந்திர மோடிக்கு கேமரா என்றாலே அலாதி பிரியம். தன்னை வீடியோ மற்றும் புகைப்படங்களில் எவ்வாறு காண்பித்துக் கொள்ள வேண்டும் என்பதிலும், கேமராவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது என்பதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கேமரா முன்பாக யாராவது வந்தாலோ அல்லது அவரை  மறைத்தாலோ அவர்களை விலக வைத்த பிறகு அங்கிருந்து செல்வார். இதுதொடர்பாக, பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.

ஜூன் 20-ம் தேதி கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி ஹெலிகாப்டர் நிறுத்தப் பகுதியில் காரில் இருந்து இறங்கி வரும் போது, அவருக்கு மரியாதை செலுத்த அரசு தரப்பில் வரிசையில் பலர் காத்திருக்க கொண்டிருக்கிறார்கள்.

அப்போது கேமரா அருகில் வந்த பிரதமர் மோடி முதலில் நின்ற நபர் கேமரா முன்பு இருப்பதைக் கண்டு அவரை பின்னோக்கி தள்ளி நிற்க அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி சொல்வதை புரியாமல் அந்த நபர் திகைத்து முன்னும் பின்னும் வந்து செல்கிறார். ஒருவழியாக பிரதமர் சொல்வதை புரிந்து கொண்டு பின்னோக்கி நகர்ந்து மற்றவர்களுடன் நிற்கிறார். அதன்பின்னர், பிரதமர் மோடி வரிசையாக அனைவருக்கும் வணக்கம் வைத்துக் கொண்டு நடந்து செல்கிறார்.

பிரதமர் வருகையை பதிவு செய்த கர்நாடகா செய்தி நிறுவனமான டிவி 9 கன்னடா சேனலில் வெளியான இக்காட்சி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Please complete the required fields.
Back to top button