பிரதமர் மோடிக்காக அதிகம் உழைக்கும் புகைப்படக் கலைஞர்கள்.. வைரல் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது ?

பிரதமர் முதல் முதலமைச்சர்கள் வரை உயர் பொறுப்பில் உள்ளவர்களை சுற்றி இருக்கும் பாதுகாப்பு காவலர்கள் மட்டுமே காரில் தொங்கியபடி செல்வதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், புகைப்பட கலைஞர்கள் அனைவரும் கார் பக்கத்தில் மூச்சிரைக்க ஓடி, காரில் தொங்கியப்படி பிரதமர் மோடி கையசைக்கும் காட்சியை படமெடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் புஜ் எனும் இடத்தில் 2001ம் ஆண்டு நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் நினைவாக “ஸ்மிருதி வான்” எனும் நினைவகம் 470 ஏக்கர் பரப்பரவில் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புஜ் எனும் இடத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றிருந்தார். நினைவகத்தை திறந்து வைத்தப்பின் மரக்கன்று ஒன்றும் நட்டு வைத்தார்.

“ஸ்மிருதி வான் ” நினைவகத்தை திறப்பதற்கு முன் பிரதமர் மோடியின் ரோடுஷோ ஒன்று புஜ் எனும் இடத்தில் நடைபெற்றது. அப்பொழுது மோடி அவர்கள் காரில் தொங்கியபடி தன்  ஆதரவாளர்களை நோக்கி கை அசைத்துக்கொண்டேச் சென்றார். இந்தத் தருணத்தை படம்பிடிக்க புகைப்படக் கலைஞர் ஒருவர் ஓட்டுநர் கதவு பக்கத்தில் தொங்கிப்படியே மோடி அவர்களை புகைப்படம் எடுத்தார். இதன் வீடியோவே சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.

வைரல் வீடியோவில் இடம்பெற்ற காட்சியின் முழுமையான வீடியோ நரேந்திர மோடி எனும் யூடுயுப் பக்கத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.

படிக்க : கேமராவை மறைக்காம பின்னாடி நகருங்க.. வைரலாகும் பிரதமர் மோடியின் வீடியோ

பிரதமர் மோடிக்கும், கேமராவிற்கும் இருக்கும் பந்தம் ஒன்றும் புதிதல்ல. அதனை யார் மறைத்தாலும் தள்ளி நிக்குமாறு சொல்லி விடுவார். அது தனது பாதுகாவலர் ஆனாலும் சரி மார்க் ஸுக்கர்பேர்(Mark Zuckerberg) ஆனாலும் சரி, அனைவருக்கும் ஒரே விதி தான். மோடிக்கும், கேமராவுக்கும் ஆனா பந்தம் என்றும் மாறாத ஒன்று.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button