வேட்பாளரை கடத்தியதாகக் குற்றம்சாட்டிய ராமதாஸ்.. சிசிடிவி காட்சியை வெளியிட்ட திமுக எம்எல்ஏ !

வேலூர் மாநகராட்சி 24வது வார்டில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பரசுராமன் என்பவரை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்திச் சென்று வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார்.

Advertisement

Archive link 

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், ” வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது!

மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனப் பதிவிட்டு இருந்தார்.

Advertisement

பாமக வேட்பாளர் பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்தியதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்த புகாருக்கு வேலூர் அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமார் மறுப்பு தெரிவித்து சிசிடிவி காட்சி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link

ராமதாஸ் அவர்கள் குற்றம்சாட்டிய உடன் எம்எல்ஏ நந்தகுமார் தன் ட்விட்டர் பக்கத்தில், ” மரியாதைக்குரிய பாமக நிறுவனர் அய்யா மருத்துவர் திரு.ராமதாஸ் அவர்களே வேலூர் மாநகராட்சி 24 வார்டு பாமக வேட்பாளர் திரு.பரசுராமன் அவர்களை யாரும் மிரட்டவுமில்லை, கடத்தவுமில்லை.

மாறாக அந்த 24 வார்டில் அவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால், எங்களை நேரில் சந்தித்து எங்களுக்கு சால்வை அணிவித்து திமுகவில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆகவே தனக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக் கொணாடார், அது திமுக நிர்வாகிக்கு ஏற்கனவே ஒதுக்கிவிட்ட காரணத்தை அவரிடம் கூறிவிட்டோம், இதற்கான ஆதாரமும் இருக்கிறது.

அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை இந்த உண்மையை நன்கு விசாரிக்கமால் எங்கள் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடையதல்ல. காரணம், பாமக வேட்பாளரை மிரட்டி வெற்றிபெற வேண்டிய நிலையில் திமுக எப்போதும் இருந்ததில்லை என்பதை தாங்களும் அறிவீர்கள் என்று நம்புகிறோம் ” எனப் பதிவிட்டு இருந்தார்.

Twitter link | Archive link 

இதையடுத்து மீண்டும் தன் ட்விட்டர் பக்கத்தில், ” பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா திரு.ராமதாஸ் அவர்களே எங்களால் கடத்தப்பட்டதாக நீங்கள் கூறிய திரு.பரசுராமன் அவர்கள் தனியாக வந்து வேமா.செயலாளர் என்ற முறையில் என்னையும், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் சந்தித்து சால்வை அணிவித்து தனக்கு திமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டதை எப்படி மறுக்க முடியும்.

ஆகவே உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி எனக்கும் எங்கள் கட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் அவப்பெயரை உருவாக்க முயற்சிக்கும் உங்கள் நோக்கம் நிறைவேறாது மக்கள் அனைத்தையும். கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் வரும் தேர்தலில் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் ” என சிசிடிவி காட்சிகள் உடன் பதிவிட்டு இருக்கிறார்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button