டெல்லி காவலர்களுக்குள் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் புகுந்து விட்டதாகப் பரவும் கேரளா காவலர் படங்கள் !

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையில் ராகுல் காந்தி விசாரணைக்கு சென்ற போது காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தை போலீசார் அடக்குமுறையுடன் கலைத்தது, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கருத்திற்கு எதிராக மற்றும் முஸ்லீம் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள், பீகாரில் இராணுவத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான இளைஞர்களின் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரித்து சவுத்ரி என்பவர், காவலர்கள் உடையில் இருக்கும் இந்த நபர்கள் யார், இவர்கள் காவலர்கள் என்றால் இவர்களின் பெயர் பலகை எங்கே ? என சில புகைப்படங்கள் உடன் கேள்வி எழுப்பி இருந்தார்.
சங்கிகள் போலீஸ் வேடத்தில் புகுந்தனரா.? பாஜகவின் கொடுங்கோல் ஆட்சியின் அட்டகாசமா..? உண்மையை அழிக்க நினைப்பவர்கள் அழிவார்கள் என்பதே உண்மை.. ஆன்மீகம் நிறைந்த இந்திய திருநாட்டை கொள்ளையர்களும் கொலைகாரர்களும் பொய்யர்களும் ஆள முடியாது. அவர்களின் அழிவு வெகு விரைவில்.
End of BJP rule soon. pic.twitter.com/SFcSSIl4z2— John Samuel 🇮🇳 (@pitchaijohn1961) June 16, 2022
காவலர்களில் சிலரது உடையில் பெயர் இடம்பெறும் பேட்ஜ் இல்லாமல் இருப்பதை குறிப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் காவலர்களுக்குள் புகுந்து விட்டதாகவும், பலரும் இது டெல்லியில் எடுக்கப்பட்டது எனக் கூறி இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், புகைப்படங்களில் இடம்பெற்ற காவலர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உடையில் கேரளா காவல்துறையின் பேட்ஜ் இருப்பதை காணலாம். கடந்த சில நாட்களாக கேரளாவிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
Muslim Student leader @AyshaRenna sustained injuries during lathicharge in Kerala’s Malappuram. She was leading a protest against the demolition of Muslim houses in UP.
Renna tells @MaktoobMedia that she was humiliated by a police officer while she was in detention pic.twitter.com/hsi5HDnSyA
— shaheenabdulla (@shaheenjournal) June 12, 2022
உத்தரப் பிரதேசத்தில் புல்டோசர் கொண்டு முஸ்லீம் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக ஆயிஷா ரென்னா கேரளாவின் மலப்புரத்தில் நடத்திய போராட்டத்தில் கடுமையான அடக்குமுறையில் தாக்கப்பட்டார். இவர் டெல்லியில் சிஏஏ போராட்டத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர்.
Kerala | Police use water cannons & tear gas as members of the BJP Yuva Morcha hold a protest against CM Pinarayi Vijayan over gold smuggling case, outside the Secretariat in Thiruvananthapuram pic.twitter.com/o1VuT86UnT
— ANI (@ANI) June 15, 2022
தங்க கடத்தல் வழக்கில் கேரளா முதல்வருக்கு எதிராக பாஜகவினரால் நடைபெற்ற போராட்டத்தை கலைக்க போலீஸ் தண்ணீரைப் பீச்சி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதுபோன்ற போராட்டங்களில் கேரளா காவலர்கள் பாதுகாப்பு உடையுடன் சென்றதை பார்க்க முடிந்தது.
எனினும், வைரல் செய்யப்படும் புகைப்படங்கள் கேரளாவில் நடைபெற்ற எந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என உறுதியாக அறியப்படவில்லை. ஆனால், கேரளா காவலர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டு வருவதை காண முடிந்தது.