This article is from Sep 30, 2019

டிக்கெட் வாரண்ட் கேட்ட பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்கள்| வைரல் வீடியோ !

நாகர்கோவில் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனரை காவலர்கள் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை பெற்று வருகிறது. காவலர்கள் நடத்துனரை தாக்கிய வீடியோவும், நடத்துனர் பேசும் மற்றொரு வீடியோவும் முகநூலில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Facebook link | Archived link 

” இப்படி வாரண்டு காண்பிக்க சொன்னால் நடத்துனரை தாக்கும் காவல்துறையினருக்கு எதற்கு நாம் இலவச பயணம் அனுமதிக்க வேண்டும். இனி மோலாவது வாரண்டு இல்லாத காலல்துறையினருக்கு பயண சீட்டு வழங்கி அனுமதிப்போம் ” என்ற வாக்கியத்துடன் காவலர்கள் அரசு பேருந்து நடத்துனரை தாக்கும் வீடியோ வைரலாகியது.

அடுத்ததாக, ” கன்னியாகுமரி மாவட்டம் ராணி தோட்டம் கிளை ஒன்றில் பணிபுரியும் நடத்துனர் பணியின் போது போலீசாரிடம் வாரண்டு கேட்டதற்கு சரமாரியாக தாக்கி உள்ளனர் இன்று(29.09.19) நடந்த சம்பவம் ” என நடத்துனர் பேசும் வீடியோ PEETA Tours & travels agents association என்ற பக்கத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இந்த பதிவில் இருந்து இந்த சம்பவம் செப்டம்பர் 29-ம் தேதி நடந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. இது குறித்து செய்திகள் வெளியாகி இருக்கிறதா என்பது குறித்து தேடினோம். அதில்,  நியூஸ் 7 தமிழ் செய்தியின், ” நெல்லையில் டிக்கெட் வாரண்ட் கேட்ட அரசு பேருந்து நடத்துனரை பேருந்தில் வைத்து சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் கைது ” என்ற நியூஸ் கார்டு கிடைத்தது.

மேலும், ” நாகர்கோவில் அரசு பேருந்தில் பயணம் செய்த காவலர்கள் தமிழரசன், மகேஷ் ஆகியோர் டிக்கெட் கேட்ட நடத்துனர் ரமேஷை தாக்கியுள்ளனர். நடத்துனர் ரமேஷை நெல்லை ஆயுதப்படை காவலர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, நடத்துனர் தாக்குதல் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் மகேஷ், தமிழரசனை கைது செய்தனர் ” என தினகரன் செய்தியில் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகி உள்ளது.

அரசு பேருந்தின் நடத்துனர் ரமேஷ் டிக்கெட் வாரண்ட் கேட்டதற்கு நெல்லை ஆயுதப்படை காவலர்கள் தாக்கிய வீடியோ வைரலாகியதால் காவலர்கள் மகேஷ், தமிழரசு கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீடியோவில், காவலர்கள் தாக்கிய கோபத்தில் நடத்துனர் தகாத வார்த்தையில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்பொழுது, அவரின் நெற்றியில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் :

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் பஸ் வாரண்ட் இல்லாமல் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியாது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. ஆனால், பஸ் வாரண்ட் இல்லாத காவலர்களிடம் டிக்கெட் கேட்டதால் இதேபோல் நடந்த சம்பவங்கள் உள்ளன.

2018 ஜூன் மாதம் சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கு வந்த பேருந்தில் பெண் காவலர் ஒருவரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்டதற்கு வாக்குவாதம் நிகழ்ந்து உள்ளது. இதையடுத்து, பெண் காவலர் டிக்கெட்  பெற்றுள்ளார். பின்னர் மானாமதுரை பகுதியில் பேருந்தை நிறுத்தி இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அங்கு வந்த காவலர்கள் தாக்கி கைது செய்துள்ளனர்.

2019 செப்டம்பர் மாதம் கடலூர் விருத்தாச்சலம் அரசு பேருந்தில் ஏறிய தலைமை காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளான ஓட்டுநர் கோபிநாத் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

links  : 

rti-answer-about-bus-ticket-for-police.html

நாகர்கோவில் அரசுப் பேருந்தில் நடத்துனரை தாக்கிய நெல்லை ஆயுதப்படை காவலர்கள் கைது

டிக்கெட் எடுக்க சொன்னதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கைது செய்த அதிர்ச்சி சம்பவம்!

Please complete the required fields.




Back to top button
loader