பழைய புகைப்படங்களை பரப்புவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை!

ஊடகங்களில் நிவர் புயல் தொடர்பான செய்திகளே முதன்மையாக இருந்ததால், சமூக வலைதளவாசிகள் நிவர் புயல் ட்ரோல் மீம்ஸ், வீடியோ, பதிவுகளை வைரல் செய்து வந்தனர். புயல் நிலவரத்தில், அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் பழைய புகைப்படங்களை பகிர்ந்ததும், அதை வைத்து எதிர் தரப்பினர் ட்ரோல் செய்து வருவதையும் பார்க்க முடிந்தது.

Advertisement

Facebook link | Archive link

முதலில், ” மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தயாராகும் உணவுகளை நேரில் சென்று ஆய்வு செய்த நமது மக்களின் முதல்வர் ” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உணவு தயார்ப்படுத்தும் சமையல் அறையில் சோதிக்கும் புகைப்படத்தை அதிமுக ஆதரவாளர்கள் வைரலாக்கினர். ஆனால், அது அம்மா உணவகத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம்.

Advertisement

Twitter link | Archive link  

அதிமுகவின் ஐடி-பிரிவின் செயலாளர் ஆஸ்ப்ரி சுவாமிநாதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை வெளியிட்டதாக ட்வீட் மற்றும் பழைய புகைப்படம் இடம்பெற்ற செய்தியை வைத்து ட்ரோல் மீம் செய்து பகிர்ந்து வருகின்றனர் திமுக ஆதரவாளர்கள். ஆனால், ஆஸ்ப்ரி சுவாமிநாதன் ட்விட்டர் பக்கத்தில் அந்த ட்வீட் இல்லை, அது நீக்கப்பட்டதா என உறுதியாக தெரியவில்லை.

Twitter archive link 

இரண்டாவது, ” புயலுக்கு முன்பே களத்தில் நிற்கும் எங்கள் இஸ்லாமிய உறவுகள். வேல புடிச்சு தொங்காம வீதிக்கு வாங்கடா சங்கீஸ் ” என திராவிட கழக ஆதரவாளர் முனைவர் சுந்தரவள்ளி ட்விட்டரில் இஸ்லாமியர்கள் பிரியாணி வழங்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

Archive link 

இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டு பின்பு நீக்கி இருக்கிறார்.

ஏனெனில், இது பழைய புகைப்படமே. இதற்கும் நிவர் புயலுக்கு தொடர்பில்லை. 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள நிவாரண பணியின் போது உதவிய புகைப்படம் என கான் பாகவி எனும் ப்ளோக்ஸ்போட் தளத்தில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. 2015-ம் ஆண்டில் எடுத்த புகைப்படத்தை இப்போது பரப்பி வருகிறார்கள் என வலதுசாரி மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

Archive link 

மூன்றாவது, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு தளங்களை சுத்தப்படுத்தும் புகைப்படங்களை வெளியிட்டு, இதுபோன்ற புகைப்படங்கள் குறித்து ஊடகங்கள் பேசுவதை நீங்கள் பார்த்து இருக்கமாட்டீர்கள் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

Archive link  

எஸ்.ஜி.சூர்யா பதிவிட்ட புகைப்படங்கள் கேரளாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என பார்த்தாலே தெரிகிறது. அதேபோல், இப்புகைப்படங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல, 2 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் எடுக்கப்பட்டவை.

Twitter Archive link 

Facebook archive link 

2 ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மசூதி, தேவாலயம் உள்ளிட்ட பகுதியை சுத்தம் செய்வதாக வெளியான புகைப்படங்களை நிவர் புயல் நேரத்தில் ஏன் பகிர்ந்தார் எனத் தெரியவில்லை. எனினும், நிவர் புயல் பாதிப்பின் போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சேவை செய்ததாகக் குறிப்பிடவில்லை. அதேநேரத்தில், இப்புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. இருப்பினும், பழைய புகைப்படங்களை பகிர்ந்ததற்கு பலரும் அவரை ட்ரோல் மற்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்பின் போது அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய மதத்தினர் என பலரும் களத்தில் சேவையாற்றியது நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், பழைய புகைப்படங்களை பகிர்வதிலும், அதற்காக ஒருவருக்கொருவர் ட்ரோல் செய்வதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button