பாலிஸ்டர் தேசியக் கொடிக்கு அனுமதி, ஜி.எஸ்.டி விலக்கு.. உலகின் மிகப்பெரிய பாலிஸ்டர் தயாரிப்பாளர் ரிலையன்ஸ் !

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அனைவரின் இல்லங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது, பொது விநியோக கடைகளில் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.

Advertisement

ஆளும் பாஜக அரசு இந்தியாவின் கொடி குறித்த சட்டம் 2002-ல் திருத்தம் செய்து 2021 டிசம்பர் 30 தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ” பாலிஸ்டர் அல்லது விசைத்தறி துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி அனுமதிக்கப்பட்டு உள்ளது “.

கடந்த ஆண்டே ஒன்றிய அரசு பாலிஸ்டர் மற்றும் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் வகையில் இந்தியக் கொடி குறியீட்டில் திருத்தம் செய்தது. இதன் மூலம் அரசு கட்டிடங்கள், தனியார் அலுவலங்கள் மற்றும் குடியிருப்புகள் என “ஒவ்வொரு வாசலிலும் மூவர்ணக் கொடி ” ஏற்றும் அரசின் திட்டத்திற்கு போதுமான கொடிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக, பருத்தி, பட்டு, கம்பளி அல்லது காதி துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஜூலை, இயந்திரத்தால் அல்லது பாலிஸ்டர் துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளின் விற்பனைக்கு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது. இதற்கு முன்பாக, பருத்தி, பட்டு, கம்பளி அல்லது காதி துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது பாலிஸ்டர் மற்றும் இயந்திரத்தால் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் தேசியக் கொடிக்கும் ஜிஎஸ்டி-க்கும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

பாலிஸ்டர் ஃபைபர் மற்றும் நூல் உற்பத்தியில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் திறன் கொண்டு உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் இருந்து வருகிறது.

ஒன்றிய அரசால் ஒவ்வொரு வாசலிலும் மூவர்ணக் கொடி எனும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக முன்பே பாலிஸ்டர் துணி மற்றும் இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிக்கு அனுமதி அளிப்பதன் மூலம் மிகப்பெரிய பாலிஸ்டர் தயாரிப்பான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உதவுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Link : 

National flag can now be machine-made, in polyester

sale-of-machine-made-or-polyester-national-flag-exempt-from-gst-finmin

https://www.ril.com/OurBusinesses/Petrochemicals/Polyesters

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button