இந்து மதத்திற்கு பிரச்சனைப் பள்ளியை மூடுங்க.. துரத்தி விட்ட பெற்றோர்கள் !

புதுச்சேரியில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அறிவித்த முழு அடைப்புப் போராட்டத்தின் போது இயங்கிய பள்ளியை மூட சொன்ன வலதுசாரிகளைப் பெற்றோர்கள் விரட்டியடித்து உள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மதத்தையும், இந்து மக்களையும் புண்படுத்தக்கூடிய வகையில் பேசியதாகவும், அதை எதிர்க்கும் வகையிலும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதேபோல், திமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் இதர அமைப்பினர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கடும் விலைவாசி உயர்வு, புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நேற்று (26.09.2022) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

எனினும், புதுச்சேரி ஆட்சியர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட சுமூக முடிவினால் இந்த பந்த் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வணிகர்கள் மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பிற்கு இடையிலும் இன்று முழு அடைப்பு திட்டமிட்டபடி நடக்கும் என அறிவித்திருந்தனர்.

முழு அடைப்பினால் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று வழக்கம் போல் காலாண்டு தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. புதுச்சேரி அரசு அறிவித்தது போல இன்று காலை உப்பளம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் வழக்கம்போல் தேர்வுக்கு மாணவிகள் வந்திருந்தனர். முழு அடைப்பினால் பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து இயக்கப்படாததால், மாணவிகளில் பெரும்பாலானோர் பெற்றோருடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

காலை 9 மணியளவில் பாஜக பிரமுகர் வெற்றிச்செல்வன் தலைமையில் இந்து அமைப்பினர் பள்ளி வளாகத்தில் சென்று முழு அடைப்பினால் “பள்ளியை மூட சொல்லியும், தேர்வுகளை ரத்து செய்ய சொல்லியும்” மிரட்டும் தொனியில் பள்ளி நிர்வாகத்தை அணுகியுள்ளனர்.

தகவல் அறிந்த வந்த காவல்துறையினர், பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்களை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். இதனிடையே காவல்துறை வருவதற்கு முன்னே பள்ளிக்கு முன் பெற்றோர்கள் கூடி இந்து அமைப்பினருக்கு எதிராக எதிர்ப்பையும், கோஷத்தையும் வெளிப்படுத்தினர். மேலும், அவர்களை அங்கிருந்து விரட்டவும் செய்தனர்.

மேலும், அப்பள்ளியில் படிக்கும் மாணவியின் தந்தையிடம் நாம் பேசிய போது,” தமிழ்நாட்டில் ஒரு எம்பி பேசியதற்கு புதுச்சேரியில் கடையடைப்பு செய்து எங்கள் வாழ்வாதாரத்தை கெடுப்பது மட்டுமில்லாமல், எங்களது குழந்தைகளின் கல்வியை இப்படி மதத்தை புகுத்தி விளையாடுகிறார்கள். மேலும் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு திங்கள்கிழமை (26.09.2022) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் விழாக்காலம் மற்றும் குழந்தைகளின் தேர்வை ஒட்டி அந்த முழு அடைப்பு தள்ளி வைக்கப்பட்டது. இங்கிருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அரசு பாஜக சொல்வதை கேட்கும் பொம்மலாட்ட அரசாக உள்ளது” என ஆதங்கப்பட்டார்.

Please complete the required fields.




Back to top button
loader