PMJAY மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் அம்சங்கள்.. சிஏஜி அறிக்கையும், ஒன்றிய அரசின் பதிலும் – விரிவான தொகுப்பு !

பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனாவுடன் இணைந்த முதலமைச்சர் காப்பீடு திட்டம்.. அம்சங்கள் மற்றும் பயன்கள் என்னென்ன..?

‘இராஷ்டிரிய சுவிஸ்திய பீம யோஜனா’ மற்றும் ‘மூத்த குடிமகன்களுக்கான சுகாதார காப்பீடுத் திட்டம்’ உள்ளிட்ட முக்கிய மருத்துவத் திட்டங்களை ஒருங்கிணைத்து ஆயுஷ்மான் பாரதிய திட்டத்தின் கீழ் “பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனா” (PMJAY) திட்டம், ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2018 செப்டம்பர் 23 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் டெல்லி தவிர மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் காப்பீட்டுத் தொகையாக தகுதியுடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் அளவிற்கு மருத்துவ பாதுகாப்பு வழங்கப்படும். கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் உள்ள குடும்பங்களில் தகுதியான பயனாளிகள் அனைவரும், கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட சமூகப் பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பை (SECC 2011) அளவுகோலாகக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளன. 

இத்திட்டத்திற்கான முழு நிதியும் ஒன்றிய மற்றும் மாநில அரசால் 60:40 என்ற விகிதங்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. ஒரு குடும்பத்திற்கான பிரீமியம் தொகையாக ஆண்டுக்கு ரூ.1052 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா (RSBY), PM-JAY தொடங்கப்படுவதற்கு முன்பே பயனாளிகளை இணைத்துக் கொண்டதால், RSBY திட்டத்தில் சேர்க்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், SECC 2011 கணக்கெடுப்பின் தரவுத்தளத்தில் இணைக்கப்படாமல் இருந்தாலும், இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

மேலும் இந்த திட்டத்தின் அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகளின் மீது கவனத்தை செலுத்துவதற்காக தனிச்சுதந்திர அமைப்பான தேசிய சுகாதார நிறுவனம் (NHA – National Health Authority) அமைக்கப்பட்டுள்ளது. இது சமூகப் பதிவுகள் சட்டம் 1860-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில சுகாதார நிறுவனங்களும் இத்திட்டத்திற்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 1.96 கோடி மருத்துவமனைகளில் பயனாளிகளை அனுமதிப்பதற்கான தொகையாக ரூ. 24,315 கோடிகள், 23,000 EHCPs (வரிசைப்படுத்தப்பட்ட சுகாதார வழக்குநர்கள்) மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில், ஏற்கனவே சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறையில் இருப்பதால், மேலே உள்ளவாறு ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் மற்றும் மாநில அரசின் சுகாதாரத் திட்டம் ஆகிய இரண்டு சின்னங்களையும் கொண்ட பொதுவான சுகாதார அட்டையாக ‘Ayushman Card‘ பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.

PM-JAY திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • 12 கோடிக்கும் அதிகமான ஏழை குடும்பங்கள் (தோராயமாக 55 கோடி பயனாளிகள்) இந்த திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
  • ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 6 கோடி இந்தியர்களை வறுமையில் தள்ளும் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளைக் குறைக்க முடியும் என்று PM-JAY நம்புகிறது.
  • நோயினை கண்டறியும் சோதனைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய 3 நாட்களுக்கும், நோயினை கண்டறிந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 15 நாட்களுக்குமான செலவுகளை, இந்த திட்டத்தின் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
  • புற்றுநோய், நீரிழிவு, இதய நோய், பிற தொற்றாத நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை போன்ற 26 வெவ்வேறு சிறப்பு பிரிவுகளின் கீழ் மொத்தம் 1669 வகையான சிகிச்சை முறைகளை இந்த திட்டம் வழங்குகிறது.
  • இந்த திட்டமானது இதற்கு முந்தைய திட்டங்களைப் போல குடும்பங்களின் அளவு, பயனாளிகளின் வயது மற்றும் அவர்களின் பாலினம் குறித்து எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை.
  • மருந்துகள், நோய் கண்டறிதல் சேவைகள், மருத்துவரின் கட்டணம், அறைக் கட்டணம், அறுவை சிகிச்சைக் கட்டணம், OT மற்றும் ICU கட்டணங்கள் போன்றவை உட்பட சிகிச்சை தொடர்பான 1,929 வகையான சேவைகளும் இதில் அடங்கும்.

கிராமப்புறங்களில் இத்திட்டத்திற்காக தகுதி பெற்றவர்கள்:

  • சொந்த வீடு இல்லாத குடும்பங்கள் மற்றும் ஆதரவற்ற மக்கள்
  • இலவச அரிசி மற்றும் உதவித் தொகை மூலம் வாழும் குடும்பங்கள்
  • துப்புரவு மற்றும் மலம் அள்ளும் தொழிலாளர்கள்
  • பழங்குடியின மற்றும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள்
  • சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளிகள்

நகர்ப்புறங்களில் இத்திட்டத்திற்காக தகுதி பெற்றவர்கள்:

  • பிச்சை எடுப்பவர்கள், குப்பை, கழிவுகளை எடுப்பவர்கள் (ragpicker) மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள்
  • தெருவோர வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், செருப்புத் தைக்கும் தொழிலாளிகள்
  • கட்டுமானத் தளங்களில் வேலை செய்பவர்கள், பிளம்பர், பெயிண்டர், வெல்டர் மற்றும் செக்யூரிட்டியாக வேலை செய்பவர்கள்
  • கூலி தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்
  • வீட்டுத் தொழிலாளி, தோட்டக்காரர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் தையல்காரர்கள்
  • ஓட்டுநர், நடத்துனர், உதவியாளர், வண்டி மற்றும் ரிக்‌ஷா இழுப்பவர் போன்ற போக்குவரத்துத் துறையில் உள்ள தொழிலாளர்கள்
  • கடைகளிலும் சிறு நிறுவனங்களிலும் வேலை செய்பவர்கள், உதவியாளர்கள், டெலிவரி செய்பவர்கள், பணியாட்கள், பியூன்கள், எலக்ட்ரீசியன், மெக்கானிக், பழுதுபார்க்கும் தொழிலாளிகள் மற்றும் சலவைத் தொழிலாளிகள்

மேலும் இத்திட்டத்தின் பயனாளிகளாக திருநங்கைகளும் கடந்த 2022 ஆகஸ்ட் 24 முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PM-JAY திட்டத்தின் கீழ் மாநில வாரியான எண்ணிக்கைகள்:

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு அரசு நிதியுதவி பெறும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 30,000 ரூபாய் முதல் 3,00,000 ரூபாய் வரையிலான உச்ச வரம்பை மட்டுமே கட்டமைத்துள்ளனர். ஆனால் பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம், ஒவ்வொரு தகுதியுள்ள குடும்பத்திற்கும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நிதிகளையும் சேர்த்து வருடத்திற்கு 5,00,000 ரூபாய் வரையிலான பணமில்லா காப்பீட்டை வழங்குகின்றது.

States/UT

Ayushman cards issued

Authorized Hospital Admissions

Value of authorized hospital admissions (in Rs)

Andaman and Nicobar Islands

33,844

651

16,011,653

Andhra Pradesh*

11

1,245,956

35,454,214,219

Arunachal Pradesh

22,726

1,812

31,559,579

Assam

12,420,824

252,251

3,749,546,919

Bihar

6,869,237

287,389

2,770,023,718

Chandigarh

63,524

11,406

81,696,009

Chhattisgarh

13,240,939

1,551,997

15,108,847,365

Dadra and Nagar Haveli | Daman and Diu

416,028

67,444

455,095,733

Goa

21,867

10,282

331,417,452

Gujarat

7,641,318

2,426,337

36,636,319,474

Haryana

2,616,418

290,815

3,588,146,295

Himachal Pradesh

1,075,101

96,035

1,077,353,995

Jammu and Kashmir

4,794,200

200,034

1,860,995,910

Ladakh

93,516

1,615

18,187,716

Jharkhand

8,992,890

867,385

8,767,034,692

Karnataka

9,782,602

1,581,386

17,576,957,813

Kerala

6,621,730

2,478,238

19,135,502,001

Lakshadweep

1,636

1

1,800

Madhya Pradesh

24,791,352

853,881

12,140,065,052

Maharashtra

7,162,216

479,528

12,416,017,419

Manipur

313,634

36,759

453,214,817

Meghalaya

1,655,716

287,303

2,210,910,884

Mizoram

356,647

55,878

576,271,260

Nagaland

258,083

19,194

277,952,667

Puducherry

250,454

6,184

31,688,824

Punjab

7,021,511

756,583

8,631,451,965

Rajasthan*

1,336,147

7,809,870,450

Sikkim

36,667

4,012

37,808,637

Tamil Nadu

24,727,508

3,102,787

38,240,413,903

Tripura

1,255,479

99,404

670,014,773

Uttar Pradesh

14,189,874

769,531

7,965,274,653

Uttarakhand

3,973,158

308,192

3,960,546,591

West Bengal

17,636

170,981,470

Undefined

762,296

122,244

903,192,165

PMJAY திட்டத்துடன் இணைந்த தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்டம்: 

தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2009-ல் ஒன்றிய அரசின் ‘இராஷ்டிரிய சுவிஸ்திய பீம யோஜனா’ திட்டத்துடன் சேர்ந்து கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டம் கடந்த 2018-இல் முதலமைச்சர் காப்பீடு திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டு ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படத் துவங்கியது. தற்போது, ​​1,829 மருத்துவமனைகள் (854 அரசு மற்றும் 975 தனியார்) இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இத்திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். மேலும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வீதம் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக, ஆண்டுக்கு ₹849 பிரீமியத்தை உள்ளடக்கி இது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் படி ஆண்டு வருமானம் ரூபாய் 1.20 லட்சம் வரை உள்ள மக்கள் பயன்பெற முடியும். மற்ற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து 6 மாதங்களுக்கு மேல் தமிழ்நாட்டில் தங்கி இருப்பவர்களும் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இணையலாம். இத்திட்டம் பற்றிய தெளிவான விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 425 3993 அல்லது https://www.cmchistn.com/features_ta.php என்ற இணையதளத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டு, மருத்துவம் படிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வரும் சூழலில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதற்காகவும், அரசு நிதியை திறம்பட பயன்படுத்தியதற்காகவும், தமிழ்நாடு அரசு 2023 பிப்ரவரியில் “சிறந்த நடைமுறைகளுக்கான விருதைப்” (Best Practices Award) பெற்றுள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை திட்ட இயக்குநர் கோவிந்த ராவ் மற்றும் எஸ்.ரவிபாபு  ஆகியோருக்கு ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம் (TNHSP) வழங்கிய ஆவணத்தின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தத் தொகையான ₹723 கோடிகளில் இருந்து, சுமார் ₹361 கோடி வரை அரசு மருத்துவமனைகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

PMJAY திட்டத்தில் முறைகேடு – CAG அறிக்கை :

PMJAY திட்டத்தின் கீழ் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக CAG அறிக்கை (Report No. 11 of 2023) தெரிவித்தது. குறிப்பாக, காப்பீட்டிற்காக 7,49,820 பயனாளிகள் “9999999999” என்ற தொலைபேசி எண்ணிலும், 1,39,300 பயனாளிகள் “8888888888” என்ற தொலைபேசி எண்ணிலும், 96,046 பயனாளிகள் “9000000000” என்ற தொலைபேசி  எண்ணிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் குறைந்தது 20 செல்போன் எண்களை மட்டுமே 10,001 முதல் 50,000 பயனாளிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, தமிழ்நாட்டில் வெறும் ஏழு ஆதார் எண்களுடன் 4,761 பதிவுகள் இணைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

 

இந்த திட்டத்தின் பயனாளிகளான 43,197 குடும்பங்களில், உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 முதல் 201 வரை இருப்பதாகவும் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக, இறந்ததாகக் கருதப்படும் 403 பேருக்கு அரசிடமிருந்து ரூ1.1 கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

மேலும், திட்டத்தின் மூலம் முதலில் SECC கணக்கெடுப்பின் படி தகுதியான 10.74 கோடி (நவம்பர் 2022) பயனாளிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டதில், 7.87 கோடி பயனாளிகள் (73%) இதுவரை பதிவு செய்துள்ளனர். பின்னர், அரசு இந்த இலக்கை NFSA தரவின் படி 12 கோடியாக உயர்த்தியுள்ளது என்றும் CAG குற்றம் சாட்டி இருந்தது.

இறந்ததாகக் கருதப்படும் நபர்களுக்கு காப்பீட்டில் பதிவு செய்துள்ளதாகக் கூறியது குறித்து ஆகஸ்ட் 17ம் தேதி விளக்கம் அளித்துள்ள ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், சில சந்தர்பங்களில், நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட போதும், அதற்கு முன்பும்(3 நாட்கள் வரை) காப்பீட்டிற்காக விண்ணப்பித்து விடுவதுண்டு, அப்போது சிகிச்சையில் நோயாளிகள் இறக்கவும் நேரிடும். இதுபோன்ற நிலையில், நோயாளி இறந்த நாள் ஆனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் அல்லது அதற்கு முந்தையதாகவே இருக்கும்.  எனத் தெரிவித்துள்ளனர்.

அதாவது, நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இறந்து போய் இருந்தாலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 நாட்கள் முன்பு வரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகான செலவுகளை மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கோர முடியும்.

ஆதாரங்கள்:

https://mera.pmjay.gov.in/

https://nha.gov.in/PM-JAY

https://web.umang.gov.in/landing/department/pradhan-mantri-jan-arogya-yojana.html

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738169

https://www.thehindu.com/news/cities/chennai/government-hospitals-in-tamil-nadu-have-earned-50-of-the-claims-under-cmchis-so-far-in-2023-24/article67493850.ece

https://cag.gov.in/uploads/download_audit_report/2023/Report-No.-11-of-2023_PA-on-PMJAY_English-PDF-A-064d22bab2b83b5.38721048.pdf

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader