குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது நேதாஜியாக நடித்தவரின் ஓவியமா ?

ஜனவரி 23- தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளில் ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேதாஜியின் ஓவியப்படத்தை திறந்து வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டது.
President Kovind unveils the portrait of Netaji Subhas Chandra Bose at Rashtrapati Bhavan to commemorate his 125th birth anniversary celebrations. pic.twitter.com/Y3BnylwA8X
— President of India (@rashtrapatibhvn) January 23, 2021
இந்நிலையில், இந்திய ஜனாதிபதி திறந்து வைத்த நேதாஜியின் ஓவியப்படம் உண்மையான நேதாஜியின் உருவமே அல்ல, 2019-ல் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் நேதாஜியின் மரணம் குறித்து வெளியான ” கும்னாமி ” எனும் பெங்காலி திரைப்படத்தில் நடித்த நடிகர் ப்ரோசெஞ்சித் சாட்டர்ஜியின் புகைப்படம் என சமூக வலைதளங்களில் பரப்பத் துவங்கினர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மைத்ரா, ” ராமர் கோவிலுக்கு 5 லட்சம் நன்கொடை வழங்கிய பிறகு குடியரசுத் தலைவர் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த நடிகர் ப்ரோசெஞ்சித் ஓவியத்தின் மூலம் நேதாஜிக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் (ஏனெனில், அரசாங்கத்தால் அதை செய்ய முடியாது) ” எனப் பதிவிட்டு இருந்தார். பின்னர், அதை நீக்கி உள்ளார்.
ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்திய குடியரசு தலைவரை ட்ரெண்ட் செய்யத் துவங்கினர். மீம்ஸ்கள் இந்தியா அளவில் பரவத் துவங்கி சர்ச்சை வெடித்தது.
உண்மை என்ன ?
The original photo of Netaji on which artist Paresh Maity based the portrait unveiled at Rashtrapati Bhawan was sourced from Jayanti Bose Rakshit, Netaji’s grand neice. https://t.co/dQozvPSZml
— Nistula Hebbar (@nistula) January 25, 2021
நேதாஜியின் பேரனான சந்திர குமார் போஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், ” இந்த உண்மையான புகைப்படத்தின் அடிப்படையில் பத்மஸ்ரீ பெற்ற ஓவியரான பரேஷ் மேத்தி வரைந்த ஓவியத்தை ராஷ்டிரபதி பவனில் ஜனவரி 23-ம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததாக ” புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
This is the original photograph of #NetajiSubhasChandraBose, based on which renowned artist Shri #PareshMaity has drawn the portrait which was unveiled at Rashtrapati Bhavan on 23 Jan 2021, by Hon’ble President of India-Shri Ram Nath Kovind ji. @rashtrapatibhvn @narendramodi pic.twitter.com/WTOHqtgs3p
— Chandra Kumar Bose (@Chandrakbose) January 25, 2021
It’s the responsibility of all political parties, social activist groups & the people of India to ensure that the fabric of our nation-Unity of all communities through diversity must be maintained. pic.twitter.com/1pGZezIQ0Y
— Chandra Kumar Bose (@Chandrakbose) December 26, 2019
2019-ம் ஆண்டு சந்திர குமார் போஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த உண்மையான புகைப்படத்தை பதிவிட்டு இருப்பதை கண்டறிய முடிந்தது. குடியரசுத் தலைவர் திறந்து வைத்த நேதாஜியின் ஓவியத்தில் கீழே ஓவியரின் கையெழுத்து இருப்பதை காணலாம்.
கும்னாமி திரைப்படத்தில் நடித்த நடிகர் ப்ரோசெஞ்சித் சாட்டர்ஜி தன் ட்விட்டர் பக்கத்தில், பரேஷ் மேத்தி வரைந்த ஓவியத்துடன் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.
Would like to congratulate Paresh Maity for the wonderful piece of art in remembrance of our National hero Netaji Subhas Chandra Bose. As an Actor,I’m elated that people thought,that the painting resembles my character in Gumnami,dir. by @srijitspeaketh and prosthetics by Somnath pic.twitter.com/HBkXvwFFSw
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) January 25, 2021
இந்த மொத்த சர்ச்சையும் முற்றிலும் போலியானது மற்றும் போலியான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ராஷ்டிரபதி பவன் அதிகாரிகளும், அந்த ஓவியம் நடிகரின் உருவம் என வதந்திகள் பரவுவது குறித்து மறுப்பு தெரிவித்ததோடு, காட்டமான பதிலையும் அளித்து இருப்பது தி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.