பக்தர்களின் தலையில் காலை வைத்து ஆசிர்வதிக்கும் பூசாரி| வைரல் வீடியோ !

ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் கடவுள்களை வழிபடும் போது வித்தியாசமான நெத்திக்கடன் செலுத்துவது, காணிக்கை செலுத்துவது போன்றவற்றை மேற்கொள்வர். கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு அங்குள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள் கைகளை உயர்த்தி ஆசிர்வாதம் செய்வதை பார்த்து இருப்போம்.
ஆனால், இங்கோ வித்தியாசமாக பக்தர்கள் வரிசையாக அமர்ந்து இருக்க அர்ச்சகர் ஒருவர் ஒவ்வொருவரின் தலையிலும் தன் காலினை வைத்து ஆசிர்வாதம் செய்துக் கொண்டே செல்லும் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அக்டோபர் 12-ம் தேதி பாஸ்கரன் தமிழன் என்பவர் முகநூலில் பகிர்ந்த வீடியோ உடன் ” பார்ப்பானுக்கு அடிமையாக நடக்கும் இந்த சூத்திரர்களை திருத்தவே முடியாது…பார்ப்பானை இப்படி வளர்த்து விடுவதே இந்த மாதிரி மூடர் கூட்டங்கள்தான்.. ” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சம்பவம் எங்கு , எப்பொழுது நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம். அக்டோபர் 11-ம் தேதி NDTV செய்தி இணையதளத்தில் ” Placing “Foot On Head”, Odisha Temple Priest’s Unique Blessing. Watch ” என்ற தலைப்பில் வைரலாகும் வீடியோ தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தனர்.
ஒடிசாவில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சாலையில் கோவில் அர்ச்சகர் ஒருவர் அங்குள்ள பக்தர்களின் தலையில் காலினை வைத்து ” ஆசிர்வாதம் ” செய்து கொண்டிருக்கிறார். இந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்படும் நவராத்தியின் இறுதி நாளான விஜயதசமி அன்று எடுக்கப்பட்ட வீடியோவை நியூஸ் ஏஜென்சியான ANI வெளியிட்டு இருந்தது.
#WATCH A temple priest gives blessings to people by putting his foot on their heads on #VijayaDashami (8th October), in Banpur area of Khordha, #Odisha pic.twitter.com/1LxpnnfPqP
— ANI (@ANI) October 10, 2019
அர்ச்சகரின் காலால் தலையில் ஆசிர்வாதம் வாங்கிய பிறகு பக்தர்கள் தங்களின் தலையை சுத்தம் செய்து கொள்வது உள்ளிட்டவை வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ ஒடிசா மாநிலத்தில் உள்ள கோர்டா மாவட்டத்தில் இருக்கும் பண்புர் எனும் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மாநிலத்தின் தலைநகரான பூரியில் இருந்து 60கிமீ தொலைவில் அமைந்து உள்ளது.
இந்த வீடியோ இந்திய அளவில் இணையதளத்தில் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் சிலரே இதை ” அசிங்கமான விதிவிலக்கு ” என கூறுவதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
இறை நம்பிக்கையில் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள் என ட்விட்டரில் உள்ளிட்டவையில் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு முன்பாக கர்நாடகாவில் உள்ள குகி சுப்ரமண்யா ஆலயத்தில் பிராமணர்கள் சாப்பிட எச்சில் இலைகளின் மீது பக்தர்கள் உருண்டு நேர்த்திக் கடனை செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வழக்கம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பழக்கங்கள் பல பகுதியில் கடைப்பிடித்து வருகின்றனர்.
இறை நம்பிக்கையை மனதில் வைக்க வேண்டும்.. யாரோ கூறுவதற்காக கண்மூடித்தனமாக எதையும் ஏற்றுக் கொள்ள கூடாது என்கிற சிந்தனை வேண்டும். பொது அறிவிற்கு பொருந்தாத வழக்கங்களை அகற்றிக் கொள்வதே நல்லது.
Links :
Placing “Foot On Head”, Odisha Temple Priest’s Unique Blessing. Watch
Karnataka bans temple ritual that involves rolling over Brahmins’ leftover food
https://web.archive.org/web/20191014110130/https://twitter.com/ANI/status